****** WORSHIP THE CREATOR !!!! BUT NOT HIS CREATIONS ******

Sunday, May 3, 2009

இஸ்லாத்தில் சாதிக‌ள் இல்லை !!!

ஓரிறை,ஓர் வேத‌ம் என‌ ஏக‌த்துவ‌த்தை பின்ப‌ற்றும் இஸ்லாமிய‌ர்க‌ள் ஏன் ஹ‌ன‌பி,ஷாபி(இந்தியாவில்), ச‌ன்னி,ஷியா ( இராக்கில்) என பல்வேறு குழுக்களாக‌ பிரிந்து கிட‌க்கின்ற‌ன‌ரே.இந்த‌ பிரிவினைக‌ளை இஸ்லாம் ஆத‌ரிக்கிற‌தா?? இஸ்லாத்தில் சாதீய‌ம் என்ற‌ ஒரு க‌ருத்து இருக்கிற‌தா ??

இதற்கு பதில் "நிச்ச‌ய‌மாக‌ இல்லை" என்ப‌தே.மேலும் இந்த‌ நெறிமுறைக‌ளின் வீரிய‌ம் கொஞ்ச‌ம் அதிக‌ம்.

இத‌ற்கான‌ ஆணித்த‌ர‌மான‌ விடையையும் திருக்குர்ஆனில் அல்லாஹ் த‌ருகிறான்.

"நிச்ச‌ய‌மாக‌ எவ‌ர் த‌ம்முடைய‌ மார்க்க‌த்தை ( த‌ம் விருப்ப‌ப்ப‌டி ப‌ல‌வாறாக‌ப் பிரித்து) ப‌ல‌ குழுக்க‌ளாக‌ பிரிந்து விட்ட‌ன‌ரோ அவ‌ர்க‌ளுட‌ன் (ந‌பியே !) உம‌க்கு எவ்வித‌ ச‌ம்ப‌ந்த‌முமில்லை;அவ‌ர்க‌ளுடைய‌ விஷ‌ய‌மெல்லாம் அல்லாஹ்விட‌மே உள்ளது.அவ‌ர்க‌ள் செய்து கொண்டிருந்த‌வ‌ற்றைப் ப‌ற்றி முடிவில் அவ‌னே அவ‌ர்க‌ளுக்கு அறிவிப்பான்."

6:159 ஸூர‌த்துல் அன் ஆம்.

மேலும் முஹ‌ம்ம‌து ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் த‌ன‌து ச‌ந்த‌தியின‌ர் 72 பிரிவுக‌ளாக‌ பிரிந்து பிள‌வுப‌டுவார்க‌ள் என‌ க‌ணித்துள்ளார்.அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் ந‌ர‌க‌ நெருப்பில் விழ‌க் க‌ட‌வ‌து என‌வும் ச‌பித்துள்ளார்க‌ள்.இவைகள் மட்டுமின்றி அல் குர் ஆனில் பல்வேறு இடங்களில் இறைவன் இதே கருத்தை வலியுறுத்துகிறான்.

ஆக‌வே,இஸ்லாம் என்ற‌ ஒரு ந‌ன்னெறி மார்க்க‌த்தில் பிரிவினைக‌ளும் ஏற்ற‌த்தாழ்வுக‌ளும் இல்லை.சாதிக‌ளோ குழுக்க‌ளோ இல்லை.உய‌ர்ந்த‌வ‌ன் தாழ்ந்த‌வ‌ன் என்ற‌ பாகுபாடு இல்லை.
யாரோடு யார் வேண்டுமானாலும் தோளோடு தோள் சேர்த்து ம‌ஸ்ஜிதில் தொழ‌லாம்.

குறிப்பிட்ட‌ ச‌மூக‌த்தை சேர்ந்த‌வ‌ர்தான் தொழுகை ந‌ட‌த்த‌ வேண்டும் என்ற உய‌ர்சாதிய‌ கோட்பாடுக‌ள் இங்கு செல்லாது.இஸ்லாத்தை ஏற்று கொண்ட‌ ஒரு த‌லித்து கூட‌ ( விஷ‌ய‌ம் தெரிந்திருக்கும் ப‌ட்ச‌த்தில் ) ம‌றுக‌ண‌மே
தொழுகை ந‌ட‌த்த‌லாம்.

மேற்கூறிய ச‌ன்னி,ஷியா,போரா போன்ற‌வை இஸ்லாத்தை த‌வ‌றாக‌ பின்ப‌ற்றும் மனித‌ர்க‌ளால் உருவாக்க‌ப் ப‌ட்ட‌ பிரிவினைக‌ளேய‌ன்றி, அவை இஸ்லாத்தின் கொள்கைக‌ளுக்கு நேர்முர‌ணான‌வை.

ஒலிம்பிக்கில் த‌ங்க‌ப் ப‌த‌க்க‌ம் வாங்கிய‌ போது க‌ருப்ப‌ர் என்ற நிற‌வெறியின் கார‌ண‌மாக அமெரிக்க அரசால் நிராக‌ரிக்க‌ப் ப‌ட்ட குத்துச்சண்டை வீரர் கேஸிய‌ஸ் கிளே, ஓக்லஹாமா ந‌தியில் த‌ன‌து ப‌த‌க்க‌த்தை தூக்கி வீசிவிட்டு பிற்கால‌த்தில் முஹம்மது அலியாக மாறியதற்கு கார‌ண‌ங்க‌ள் இல்லாம‌லில்லை.ம‌த‌ங்கள் ம‌ட்டுமே பிரிவினையை வ‌ள‌ர்க்கின்ற‌ன என கூக்குர‌லிடும் நாத்திக‌ர்க‌ள் க‌வ‌னிக்க‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம் ஒன்று மட்டுமே.

இஸ்லாத்தில் சாதிக‌ள் இல்லை.

*****************************************************************************

Sunday, April 19, 2009

ஹலோ...girls உங்களைதான்...
நம் பெண்கள் நல்ல முன்னேற்ற பாதையில் போய்க் கொண்டிருக்கிறார்கள்....கல்வியிலும் அலுவலகங்களிலும் தனி இடத்தை பிடித்திருக்கிறார்கள்.நாம் வெளியில் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி தான் இந்த பதிவு....இப்படிதான் இருங்கள் என்று சொல்லவில்லை,இப்படியும் முயன்று பாருங்களேன்...வேறு மாற்று வழிகள் இருந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்........


'இன்னும்;முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்;தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்;தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது;இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்;மேலும்,(முஃமினான பெண்கள்) தம் கணவர்கள்,அல்லது தம் தந்தையர்கள்,அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள்,அல்லது தம் புதல்வர்கள்,அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள்,அல்லது தம் சகோதரர்கள்,அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள்,அல்லது தங்கள் பெண்கள்,அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்,அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர ,(வேறு ஆண்களுக்குத்)தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது;மேலும்,தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்;மேலும்,முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றிப் பெறும் பொருட்டு,நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்'


(24: 31)
1.உங்கள் ஆடைகள் கண்ணியமானதாக இருக்கட்டும்.ரொம்ப 'டைட்டா'கவும் இல்லாமல் அதிக 'லூசா'கவும் இல்லாமல்,கண்களை உறுத்தாமல் கச்சிதமாக இருக்கட்டும்....
2.உடலை முழுக்க மூடும் 'புர்கா' அல்லது 'அப்பாயா' போடுவது உடை விஷயத்தை எளிதாக்கிவிடும்.அப்படியில்லையென்றால்,முழுக்கை 'சல்வார்' அல்லது முழுக்கை 'குர்தா' போன்றவை அணிந்து தலையை மூடும் scarf போட்டுக் கொள்ளலாம்.....
3.அதிக அலங்காரத்தையோ வாசணை திரவியங்களையோ முடிந்தளவு தவிர்க்கப் பாருங்கள்....
4.ஆண்களிடம் நட்பாகப் பழகுவது தவறில்லை.ஆனால், அது ஒரு கண்ணியமிக்க நட்பாக மட்டுமே இருக்கட்டும்.மாறாக,தேவையில்லாத 'வெட்டி' அரட்டைகளுக்கும் 'வழிசல்'களுக்கும் இடம் கொடுப்பதாக இருக்க வேண்டாம்....
5.யாரேனும் தங்களிடம் நட்பின் பேரில் உரிமை எடுத்துக் கொள்ள முற்பட்டால்,அவர்களிடம் கடுமையாக நடக்க தயங்காதீர்கள்....
6.புண்ணகை முகமாக இருங்கள்.ஆனால்,தேவையில்லாமல் சிரிக்கும்,வரையில்லாமல் பேசும் பெண்களில் ஒருவராக நீங்கள் இருக்க வேண்டாம்....
7.தங்கள் நன்பர்களைப் பற்றி பெற்றோரிடம் எந்த ஒளிவுமறைவும் வைத்துக் கொள்ளாதீர்கள்.உங்கள் நட்பு வட்டாரத்தில் இருக்கும் ஆண்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வையுங்கள்.அது உங்கள் நன்பர்களை உங்களுடன் வரைமுறையோடு பழகச் செய்யும்.....
8.'late night' போன்களையும் 'sms'களையும் தவிருங்கள்......
9.தற்போது batch party,batch tour போன்றவை சகஜம்.அச்சமயங்களில் முடிந்தளவு பெண்கள் கூட்டத்தோடு சேர்ந்துக் கொள்ளுங்கள்.
10.எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவராக தங்களைக் காட்டிக் கொள்ளாதீர்கள்.....
11.பிரச்சனைகளை பொறுமையுடன் கையாள்பவராக இருங்கள்.....
மொத்தத்தில்,பிறரின் பார்வைக்கு நீங்கள் ஒரு மதிப்புமிக்க கண்ணியமான பெண்ணாகத் தெரிய வேண்டுமே தவிர பேதை பெண்ணாக அல்ல......

Sunday, March 22, 2009

நாம் வெறும் பெயர் தாங்கி முஸ்லிம்களா???ஒரு சுய அலசல்.....part 3


1. " இன்னும் : மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல் ) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான்.அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்.ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின் அவன் ( தன் முகத்தை ) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்;இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான்.இதுதான் தெளிவான நஷ்டமாகும்." ( 22 :11 )சுபஹானல்லாஹ்......இது நம்முடைய வாழ்வு முறையோடு எவ்வளவு பொருந்துகிறது.நம்மை திருத்திக் கொண்டு நஷ்டத்திலிருந்து தவிர்ந்து கொள்வோம்.......


2. " அன்றியும்,அவர்கள் பொய் சாட்சி சொல்ல மாட்டார்கள்; மேலும்,அவர்கள் வீனான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்." ( 25:72 )சின்ன சின்ன விஷயங்களில்கூட நாம் பொய்க்கு துணைப் போக கூடாது.வீணான காரியம் என்றால் வெட்டிப் பேச்சு, ஊர் வம்பு போன்ற காரியங்களும் தானே..........


3." (பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே ! பூமியில் பெருமையாகவும் நடக்காதே ! அகப்பெருமைக்காரர்,ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்" ( 31 : 18 )


4. " உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசலாட்டம் ( தீயதைச் செய்ய ) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக ! நிச்சயமாக அவன் ( யாவற்றையும்) செவியேற்பவன் ; நன்கறிபவன்" ( 41 : 36 )இது நமக்கு அடிக்கடி நடப்பதுதான்.அதாவது கெட்ட எண்ணம் அல்லது தூண்டுதல்.அதற்கான solutionதான் மேற்கூறிய வசணம்............

Monday, February 9, 2009

புரட்சி மார்க்கம் இஸ்லாம் பாகம்-2

கடந்த பாகத்தில் சகோதரி ஒருவர் கேட்ட கேள்விகளுள் முதல் இரண்டிற்கான
பதிலகள்.

1.Why should we have to follow quran?


எல்லா மார்க்க புனித நூல்களும் ஏறத்தாழ ஒரே மாதிரியான அடிப்படை கொள்கைகளைத்தான் பெற்றிருக்கின்றன.எல்லா வேதங்களும் நற்காரியங்களை முன்னிலைப் படுத்தியும்,தீயவைகளை இகழ்ந்தும் தான் போதனைகளை மேற்கொள்கின்றன.
இப்படி இருக்கும் பட்சத்தில் குர் ஆன் எந்த அளவில் உயர்ந்து நிற்கிறது ??
குர்-ஆன் க்கும் மற்ற வேதங்களுக்கும் அப்படி என்ன வித்தியாசம் இருக்கப்
போகிறது.என்றெல்லாம் கேள்வி எழலாம்.

தீயவற்றைச் சாடுவது மட்டுமின்றி அதிலிருந்து ஒரு மனிதன் எப்படி விடுபடலாம்
என்ற நடைமுறை தீர்வுகளும் குர் ஆனில் கொட்டிக் கிடக்கிறது.
இது போன்ற "பிராக்டிகல் சொல்யூஷன்கள்" தான் மற்ற மார்க்க நூல்களையும்
குர் ஆனையும் வேறுபடுத்தி காட்டுகிறது.

எடுத்துக்காட்டாக, திருட்டை எடுத்து கொள்வோம்.

அடுத்தவர் பொருளை அபகரிப்பது குற்றம்..அனுமதியின்றி மற்றவர் சொத்துக்களை
திருடுதல் பாவம் என்று எல்லா நூல்களும் தான் சொல்கின்றன.ஆனால் திருடியவனுக்கு என்ன தண்டனை வழங்கப் படவேண்டும்.இந்த மாதிரியானதண்டனைகள் திருட்டை எந்த அளவில் முற்றிலும் ஒழிக்கப் பயன்படும் என்பதை குர்-ஆன் தெளிவாக விளக்குகிறது.

"திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு,அல்லாஹ்விடமிருந்து தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள்." (5:38)

"இது என்ன ஒரு பழமைத்துவ காட்டுமிராண்டித் தனம்" என்று கேள்வியெழுப்பும்
பகுத்தறிவு பகலவன்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம்,

அதே குர் ஆனில் தான் 31 தடவை ஜகாத் என்னும் தானதர்மம் குறித்து
அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டுள்ளது.85 கிராம் தங்கமும் அல்லது அதற்கிணையான
மதிப்புள்ள பணமோ வைத்திருக்கும் ஒவ்வொரு தனிமனிதனும்,ஆண்டொன்றுக்கு ஒருமுறை அவர்தம் சொத்திலிருந்து, 2.5% சதவீதம் கண்டிப்பாக ஏழை எளிய மக்களுக்கு தானம் தர்மம் செய்தாக வேண்டும்.இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் ஜகாத் ஐ பின்பற்றினால்,வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்களின் எண்ணிக்கையை பெருமளவிற்கு குறைக்கலாமில்லையா ???

இன்னும் பர்தா எனப்படும் ஹிஜாப் இன் சட்டமும், பெண்களுக்கெதிரான
சில இழிசெயல்களைத் தடுக்கும் ஒரு நல்ல தீர்வு என்று சொன்னால் அது மிகையாகாது.
பெண்களை மட்டும் தங்கள் உடலை மறைத்து பாதுகாக்கச் சொல்லும் குர் ஆன்
ஆண்களை கண்டிக்காமல் விட்டு விட்டதா என்று கேட்போருக்கு இன்னொரு விஷயம்

நபியே முஃமினான‌ ஆண்க‌ளுக்கு நீர் கூறுவீராக !!! அவர்கள் தங்கள் பார்வைகளை
தாழ்த்தி கொள்ள வேண்டும்.தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்து கொள்ள வேண்டும்..(24:30)

இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக !! அவர்கள் தங்கள் பார்வைகளை
தாழ்த்தி கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்து கொள்ள வேண்டும்..(24:31)

பெண்களுக்கு அறிவுரை கூறும் ஒரு வசனத்திற்கு முன்பே, ஆண்களும் எவ்வாறு
நடந்து கொள்ள வேண்டும் என்று குர் ஆன் சொல்லி விட்டது.

திருக்குரான் மட்டும் தான் உலகம் உள்ளளவும்,எல்லா காலகட்டங்களிலும் வாழும் மனித சமுதாயத்திற்கு பொருந்தும் வகையிலும் அருளப் பெற்றுள்ளது.மனித குலத்தின் அனைத்து குழப்பங்களுக்கும் குர் ஆனில் தீர்வு உள்ளது.மற்ற வேதங்களைப் போலன்றி,மனிதர்களின் இடைச் செருகல்களும்,புனைவுச் சித்திரங்களாகவும் இல்லாமல் முழுக்க முழுக்க இறைவனின் வார்த்தைகளாக, அப்பழுக்கற்றதொரு நூலாக குர் ஆன் விளங்குகிறது. ஆகவே காலத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு புனித நூலாக மட்டுமின்றி,
ஓரிறை கொள்கை,ஆட்சி முறை,அறிவியல்,சமூகம்,குடும்பவியல்
ஆகிய மனித குலத்திற்கு தேவையான எல்லா கல்வியையும் வலியுறுத்தும்
ஒரு அற்புத வழிகாட்டியாகவும் குர் ஆன் திகழ்கிறது.
2.Why should we have to accept Islam as one religion other than anything else?

இந்த கேள்விக்கு விடையளிக்குமுன் பா.ராகவன் எழுதிய 'நிலமெல்லாம் ரத்தம்'
என்ற புத்தகத்தில் அவர் இஸ்லாம் குறித்தும்,முஹம்மது நபி(ஸல்) அவர்களைப்
பற்றியும் குறிப்பிட்டிருந்த பகுதிகளில் சில உங்கள் பார்வைக்கு..

"மற்ற இறைத்தூதர்களைப் பற்றிய தகவல்களுக்கு நாம் புராணக் கதைகளையே ஆதாரங்களாகக் கொள்ள வேண்டியிருக்கிற நிலையில், இவர் ஒருவரைக் குறித்த விவரங்களை மட்டும்தான் கதைகளிலிருந்து அல்லாமல், சரித்திரத்தின் பக்கங்களிலிருந்தே நாம் பெற முடிகிறது. காலத்தால் நமக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது மட்டுமே இதற்குக் காரணமல்ல. அவரது காலத்தில் வாழ்ந்தவர்கள், அவருடன் நேரில் பழகியவர்கள், அவரது பிரசங்கங்களை, போதனைகளைக் கேட்டவர்கள் எழுதிவைத்த குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன. முகம்மது குறித்த ஒவ்வொரு தகவலும் பல்வேறு நிலைகளில் சரிபார்க்கப்பட்டு, ஒப்புநோக்கப்பட்டு, அவருடன் நேரடியாகப் பழகியவர்கள் விவரித்துள்ளவற்றுடன் பொருந்தினால் மட்டுமே அச்சேறின. இதனால், முகம்மது குறித்த விவரங்களின் நம்பகத்தன்மை பற்றிய அத்தனை கேள்விகளும் அடிபட்டுப் போய்விடுகின்றன. ஆதாரம் இல்லாத ஒரு குட்டிக்கதை, கதையின் ஒருவரி... ஒரு சொல் கூடக் கிடையாது.இதன் அடிப்படையில்தான் இப்படியொரு முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது."

எனவே நம்பகத் தன்மை குறித்த சந்தேகங்களில் முதலில் தெளிவு பெறுகிறோம்.

இறைவனின் கட்டளைக் கிணங்க,முஹம்மது நபியவர்கள் சொன்னது மிகவும் எளிய
வாழ்வியல் முறைகள்.

ஓரிறையை வணங்குங்கள்.அவனுக்கு இணை வைக்காதீர்கள்.
தொழுகையை நிறைவேற்றுங்கள்.

விரதமிருங்கள்.ஏழை எளிய மக்களுக்கு ஜகாத் மூலம் உங்கள் செல்வத்தில் ஒரு பகுதியை
தானமாக கொடுங்கள்.

உடல் நலனும் பொருள் வசதியும் உள்ளவர்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும்
ஹஜ் செய்யுங்கள். அவ்வளவே !!!

இஸ்லாத்தை ஒரு மதமாக எண்ணாமல்,இப்படித்தான்
வாழ வேண்டும் என்ற ஒரு கடினமான மனப்போக்குடன் இல்லாமல்,நல்ல நெறிமுறைகளை போதிக்கக்கூடிய ஒரு மார்க்கமாக, இப்படியும் வாழலாம் என தெளிவுபடுத்திய ஒரு மார்க்கமாக எண்ணி பின்பற்றுவோர் மீது இறைவனின் சாந்தியும்
சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக !!!!


விடைகள் தங்களுக்கு திருப்தியளிக்க வில்லையென்றால்,பின்னூட்டத்தில்
தெரிவிக்கவும்.மீண்டும் ஒருமுறை விளக்க முயலுவோம்.

மீதமுள்ள இரண்டு கேள்விகளுக்கான விடைகள் அடுத்த பாகத்தில் ( இறைவன் நாடினால்.. )

Sunday, February 1, 2009

நாம் வெறும் பெயர் தாங்கி முஸ்லிம்களா???ஒரு சுய அலசல்.......part 2
"and do not make your hand (as) chained to your neck or extend it completely and (thereby) become blamed and insolent" [17:29]


எவ்வளவு அற்பதமான,அவசியமான வரிகள்........நாம் கைகளைக் கழுத்தோடு கட்டிக் கொள்ளவும் கூடாது,ஒரே அடியாய் விரித்து விடவும் கூடாது.அப்படியென்றால் நாம் இரண்டுக்கும் நடுநிலையாய் சிக்கணமாக இருக்க வேண்டும்........ஆனால்,நம்மில் பலரும் இப்படியா நடந்து கொள்கிறோம்????ஒன்று பணத்தை வாங்கி வாங்கி பீரோவில் பூட்டி வைத்துக் கொண்டு, கேட்கிறவர்களிடமெல்லாம் கையை விரிக்கின்றோம் இல்லையென்றால் தாட் பூட் என்று தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் பணத்தை வாரி இரைத்து நம்மிடமும் பணம் இருக்கிறதென காட்டி கொள்கிறோம்.........."O you who have believed,let not a people ridicule (another) people;perhaps they may be better than them;nor let women ridicule (other) women; perhaps they may be better than them.And do not insult one another and do not call each other by (offensive) nick names wretched is the name (i.e. mention) of disobeidience after (one's) faith.And whoever does not repent then it is those who are the wrongdoers" [49:11]நாம் எத்தனை பேரை கேலி பேசியிருக்கிறோம்???எத்தனை கிண்டல்கள்????

நான் சொல்வது மற்றவரை புன்படுத்தும் வகையராக்கள்..........எத்தனை பேரை அவமான படுத்தியிருக்கிறோம்????இவற்றையெல்லாம் இப்பொழுதே விட்டொழித்து பாவ மன்னிப்புக் கோரி விடுவது best இல்லையா????சிந்தியுங்கள்................"O you who have believed,avoid much (negative) assumption.Indeed,some assumption is sin.And do not spy or backbite each other.would one of you like to eat the flesh of his brother when dead? you would detest it.And fear Allah ; indeed,Allah is accepting of repentence and merciful" [49:12]இவன் இப்படி தான்,இவ தான் செஞ்சிருப்பா,இது இப்படி தான் நடந்திருக்கும்.......we jump in to conclusions ourselves;but do we analyse our conclusions????நிச்சயமாக அவற்றில் பல உண்மையல்லாத நம் வெற்று ஊகங்கள்தான்........அடுத்த வீட்டுக் காரன் எத்தனை மணிக்கு வந்தால் நமக்கென்ன அல்லது எதிர் வீட்டில் எத்தனை மணிவரை விளக்கெரிந்தால் நமக்கென்ன???ஆனால் அதனை துருவி துருவி ஆராய்ந்து அதனை பற்றி மற்றவரிடம் headlines வாசிக்கும் போது எவ்வளவு சந்தோஷம் நமக்கு............Oh God.,நாம் சர்வ சாதாரனமாக செய்துக் கொண்டிருக்கும் இந்த காரியத்திற்கு இறைவன் கொடுக்கும் உதாரனத்தை யோசித்துப் பாருங்கள்???அருவருப்பாய் இருக்கிறதல்லவா????? இப்படிப் பட்டதை தொடர வேண்டுமா?????


சிந்தியுங்கள்.....................................மீண்டும் சில அடுத்த பதிவில்...................

Monday, January 26, 2009

புரட்சி மார்க்கம் இஸ்லாம் பாகம்-1

"யுத்த நெடியும் ரத்தக் கறைகளும் படிந்த கள்ளிச் செடி மிகுந்த‌ பாலைவனங்களில்
இறைவன் பூச்செண்டு தூவிய‌ த‌ருண‌ம் அது.

ஆயிர‌க் க‌ண‌க்கான‌ மூட‌ந‌ம்பிக்கைக‌ள் விற்கப்பட்ட‌ மாட்டுச் ச‌ந்தையில் ம‌ரிக்கொழுந்து
வீசிய‌ கால‌ம் அது.

பெண்க‌ள் வெறும் இனவிருத்தி சாத‌ன‌ங்க‌ளாக மட்டுமே ப‌ய‌ன்ப‌டுத்த‌ப் ப‌ட்ட, ப‌டிப்ப‌றிவ‌ற்ற மூட‌ர்க‌ளைக் கொண்ட‌ இருண்ட‌ அர‌ப‌க‌த்தில், ஒளிவெள்ள‌ம் தோன்றிய‌ கால‌ம் அது.

பிறந்த‌ பெண்சிசுக்க‌ளையெல்லாம் உயிரோடு ம‌ண்ணில் புதைத்த‌ முட்டாள் ச‌மூக‌த்தை
சீர்ப‌டுத்த ச‌த்தியஜீவன் உதித்த காலம் அது.

எங்கிருந்தோ எடுத்து வ‌ர‌ப்ப‌ட்ட முந்நூறு சிலைக‌ளை வ‌ண‌ங்கி, பிற்போக்கு சிந்த‌னையின் உச்சாணியில் அம‌ர்ந்திருந்த‌ காட்ட‌ர‌பிக‌ளின் வாழ்வை, ஓரிறை ஒர் குடையின் கீழ் நெறிப்ப‌டுத்த,உத்த‌ம ம‌னித‌ம் உதித்த‌ கால‌ம் அது.

ஒட்டுமொத்த அழுக்கையும் க‌ழுவித் துடைக்க, இறைவ‌ன் இப்பூவுல‌குக்கு அனுப்பிய‌ இறுதித் தூத‌ர் முஹ‌ம்ம‌து ந‌பி (ஸல்) அவ‌ர்க‌ள்,ஒரு புர‌ட்சி மார்க்க‌த்தை, இறைவ‌ன் த‌ம‌க்க‌ளித்த‌ வ‌ஹி எனப்ப‌டும் இறைச்செய்தியை, அன்றைய‌ அர‌ப‌க‌த்தில் எத்தி வைக்க‌ ஆர‌ம்பித்த‌ கால‌ம் அது."இஸ்லாம் என்ற‌ ஒரு அமைதியின் மார்க்க‌த்தை, அந்த புரட்சி மார்க்கத்தை அதைத் த‌வ‌றாக‌ பின்ப‌ற்றுப‌வ‌ர்க‌ளைப் பார்த்து தான் மாற்றும‌த‌ ச‌கோத‌ர‌ர்க‌ள் எடைபோடுகின்ற‌ன‌ர்.

அவ‌ர்க‌ள் இஸ்லாத்தை புரிந்து கொள்வ‌த‌ற்கு முன் சில‌ அடிப்ப‌டை விஷ‌ய‌ங்க‌ளில் த‌ங்க‌ளை தெளிவு ப‌டுத்தி கொள்ளுத‌ல் ந‌ல‌ம்.
அந்த புரிதலை கொணர்வதே இந்த தொடர்பதிவின் நோக்கம்.

ஒரு சிறு கேள்வி ப‌தில் ப‌குதியாக‌ இந்த‌ தொட‌ர்ப‌திவை ஆரம்பிக்கிறேன்.

************************************************
1.குர் ஆன் என்றால் என்ன ??

குர் ஆன் என்பது முழுக்க முழுக்க இறைவனது வசனங்களின் தொகுப்பு.
இது முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு, ஜிப்ரயீல் என்ற ஒரு வானவரின் மூலமாக
கொஞ்சம் கொஞ்சமாக 22 ஆண்டுகளாக அருளப்பெற்றது.

ஆகவே, குர் ஆன் என்ற ஒரு புனித நூல் முஹம்மது நபியோ அல்லது அவர்களின் மற்ற தோழர்களோ எழுதிய ஒன்றல்ல.

அது இறைவ‌னின் வாக்கு.


************************************************

2. ஹதீஸ் என்றால் என்ன ??

ஹதீஸ் என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாய்மொழிச் சொற்களின்
தொகுப்பு.இது ந‌பித் தோழ‌ர்க‌ளால், முற்றிலும் உண்மை என்று அதிகார‌ப் பூர்வமான‌
ஆதார‌ங்க‌ளுட‌ன் தொகுக்க‌ப் ப‌ட்ட‌து.அதனால் ந‌ம்ப‌க‌த் த‌ன்மையின்மை என்ற‌ பேச்சுக்கே இட‌மில்லை.


*************************************************

3.குர் ஆன் ஹதீஸ் இவ‌ற்றுள் முஸ்லிம்க‌ள் எதைப் பின்ப‌ற்ற‌ வேண்டும் ??

இர‌ண்டையுமே பின்ப‌ற்ற‌ வேண்டும்.

குர் ஆன் ஹதீஸ் இவை இர‌ண்டுமே முர‌ண்ப‌ட்ட‌ க‌ருத்துக‌ள‌ல்ல.
இறைவ‌ன் குர் ஆனில் என்ன அருளினானோ, அதையே தான் ந‌பிக‌ள்
வ‌ழிமொழிந்தார்க‌ள்.வாழ்ந்தும் காட்டினார்க‌ள்.


************************************************

இன்ஷா அல்லாஹ் !! கேள்வி பதில் தொடரும்.

(களைகள் பிடுங்கப்படும்...)Saturday, January 24, 2009

நாம் வெறும் பெயர் தாங்கி முஸ்லிம்களா???-ஒரு சுய அலசல்......
நம் பெயர்கள் அரபு பெயர்களாகவும்,நாம் தொப்பி வைத்துக் கொள்வதாலும்,தாடி வைத்துக் கொள்வதாலும் அல்லது பர்தா அணிந்துக் கொள்வதாலும் நாம் முஸ்லிம்களாகி விடுவோமா????அப்படியென்றால் சுவர்க்கம் எளிதாக அடைந்து விடக் கூடிய இடமாகிடுமே........????அப்படியென்றால் நம் முன்னால் சென்ற நபிமார்களும் , நபிதோழர்களும் ஏன் தங்கள் வாழ்வின் சாதாரண நிகழ்வுகளைக் கூட இது சரியா தவறா என கவன‌மாக ஆராய்ந்து செய்தனர்????ஒருவேளை நாம் up to the mark இல்லையோ????அல்லது நாம் வெறும் பெயர் தாங்கி முஸ்லிம்களா????காலம் கடந்து விடுவதற்குள் நாம் இதனை தெளிவுப் படுத்திக் கொள்வோமே............நமக்கான instruction manual-லான திருக்குர்ஆனில் நம்மை படைத்த இறைவன் நாம் எப்படி இருக்க வேண்டும் என்கிறான்.....நாம் எப்படி இருக்கிறோம் என திறந்த மனதுடன்,உண்மையாக,relax-ஆக நாம் ஒவ்வொருவரும் ஒரு சுய அலசலில் ஈடுபட வேண்டும்........................


"who believe in the unseen,are steadfast in prayer,and spend out of what we have provided for them;" (1:3)


முஸ்லிம்கள் தொழுகையைக் கடைப்பிடிப்பார்கள்,ஜகாதையும் முறையாகக் கொடுப்பார்கள் என இன்னும் பல இடங்களிலும் இறைவன் கூறுகிறான்........ஆனால்,நாம் எப்படி இருக்கிறோம்???

தொழுகையை முறையாக அதற்குறிய நேரத்தில் தொழுகிறோமா அல்லது cricket,serial,shopping,business என்று தள்ளிப் போடுகிறோமா??? ஜகாத் இன்றுவரைக்கும் என்னைப் பொறுத்தவரை என் அப்பா அம்மா department.....என் போன்றோர் முடிந்தவரை தங்கள் pocket moneyஇல் மற்றவர்களுக்கு உதவலாம் அல்லது தன் வசம் உள்ள உடைகள்,பொருட்கள்,அறிவு ஆகியவற்றாலும் உதவலாம்........ஜகாத் கொடுக்க முடிந்தவர்கள் முறையாகக் கணக்கிட்டுக் கொடுக்கிறீர்களா அல்லது குத்துமதிப்பா இரண்டாயிரத்து சொச்சம் என கொடுப்பீர்களா????"guard strictly your (habit of) prayers,especially the middle prayer;and stand before God in a devout (frame of mind)" [2:238]நடுத்தொழுகையை அஸர் தொழுகை என எடுத்துக் கொண்டால், நம்மில் பலருக்கு school,college,businessஆல் அதிகம் கட்டாவது லுஹரும் அஸரும் தான்.................


"and your Lord has decreed that you not worship except Him,and to your parents;good treatment.whether one or both of them reach old age (while) with you,say not to them (so much as ) "uff" and do not repel them but speak to them a noble word" [17:23]


நம் அம்மா அப்பாவிடம் நாம் எவ்வாறு நடந்துக் கொள்கிறோம்???வயதானவர்களை துரத்திவிடாமல் அன்புடன் நடத்துகிறோமா???"uff" என்றுக் கூட சொல்லக் கூடாதெனும் போது,நாம் பயங்கரமாக திட்டுகிறோமே அது????"and tell my servants to say that which is best.........." [17:53]


உரிய அழகான வார்த்தைகளை மட்டும் தான் நாம் பேசுகிறோமா???நாம் பேசுவதில் எத்தனையோ அர்த்தமற்ற தேவையில்லாத வார்த்தைகள் இருக்கின்றனவே????"and be moderate in your pace and lower your voice;indeed , the most disagreeble of sounds is the voice of the donkeys" [31:19]எத்தனை அழகாக நம்மை நாசூக்காக நடந்துக் கொள்ள சொல்கிறான் நம்மை படைத்தவன்........
இவற்றையெல்லாம் சிந்தியுங்கள்.........உங்களை நீங்களே அலசுங்கள்.........தவறைத் திருத்திக் கொள்ளுங்கள்.........


மேலும் சில அடுத்த பதிவில்.............
Monday, January 19, 2009

ஒரு குழந்தையும் மூன்று தகப்பன்மார்களும்


முன் ஜாமீன்: இது ஒரு வரலாற்றுப் பதிவோ,இல்லை சேகரிக்கப் பட்ட செய்திகளின் தொகுப்போ அல்ல.என்னுடைய தனிப்பட்ட கோபத்தின் விளைவு தான் இந்த பதிவு.

கடந்த வாரம் வெள்ளியன்று ஜூம்ஆ சிறப்புத் தொழுகைக்கு முன் அடையாறு மஸ்ஜிது இமாம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் நிகழ்த்திய பேருரை பலபேரை வெகுவாக பாதித்திருக்கும்.காசாவில் பெண்களும் குழந்தைகளும் இஸ்ரேலிய வெறியாட்டத்தால் அனுபவித்து கொண்டிருக்கும் சொல்லொணா துயரங்களை அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கே அமர்ந்திருந்த அனைவரது கண்களிலும் கண்ணீர்த் திரை மறைத்து கொண்டிருந்தது.எங்கள் செவிகள் மட்டுமே கேட்டு கொண்டிருந்தன.

*********************

ஒவ்வொரு போரும் பல படிப்பினைகளை நமக்கு ஏற்படுத்தி தருகிறது.ஆனால் இருபெரும் உலக யுத்தங்களின் முடிவில், யூதர்கள் கொஞ்சம் நிறையவே கற்றுக் கொண்டனர்.விளக்கெண்ணெய் சுவையையும் காண்சென்டிரேஷன் கேம்ப்களின் நினைவுகளையும் அவர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.ஓ ஜெருசலேம் என்ற புத்தகத்தில் ஒரு யூதரல்லாத ஒரு அறிஞர் எழுதுகிறார்.ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியின் போது,அகதிகளாக கூட யூதர்களை ஏற்க மற்ற நாடுகள் மறுத்துவிட்டன‌. ஒவ்வொரு நாட்டின் கதவை தட்ட முற்படும்போதும் ஓடஓட விரட்டப்பட்டனர்.

1948க்கு முன் இஸ்ரேல் என்ற ஒரு நாடு உலக வரைபடத்திலேயே இல்லை.யூத நிலவங்கி என்ற ஒரு வங்கியை ஆரம்பித்து உலகிலுள்ள யூதர்களையெல்லாம் ஒன்று திரட்டி, பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்த பாலஸ்தீன பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வசம் கொண்டுவந்து,தமக்கென்று ஒரு தனிநாட்டையே உருவாக்கினர் என்று அவர்களின் ஒற்றுமையின் பராக்கிரமம் பற்றி எழுதிய வரலாறுகள் நாமறிந்ததே.

அப்போதிருந்த பாமர அரபிகளுக்கு யூதர்களின் இந்த சூட்சுமம் புரிந்திருக்க வாய்ப்பில்லை.இன்று சொந்த நாட்டில் இருக்க இடமின்றி அகதிகளாக திரிந்து கொண்டிருக்கின்றனர்.தொடர்ந்து 60 ஆண்டுகள் இந்த துப்பாக்கிச் சத்தம் கேட்டு அவர்கள் சலித்துப் போயிருக்கக் கூடும்.மேற்கு கரை,சிரியா,லெபனான்,ஜோர்டன் நாடுகளில் உள்ள மில்லியன் பாலஸ்தீனிய அகதிகளுக்கு இன்று வரை தங்கள் எதிர்காலம் எந்த நாட்டில் என்று தெரியாது.இதுமட்டுமின்றி மற்ற நாடுகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் கூட தன் சொந்த மண்ணில் கால் வைக்க முடியாத நிலைமை.

பிரிட்டன் வசமிருந்த பாலஸ்தீனிய மண்ணிலிருந்து, அந்த‌ இஸ்ரேலிய குழந்தை பிறக்க மெனக்கெட்டது அமெரிக்கா,பிரான்ஸ்,பிரிட்டன் என்ற 3 தந்தையர்கள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

அதனால் தான் என்னவோ,அந்த தந்தையர்களுக்கு நல்ல குழந்தையாக மட்டுமின்றி, வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன் சொன்னது போல, அமெரிக்காவின் விசுவாசமிக்க ஏவல் நாயாகவும் இன்றளவும் இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது
மேலும் அவ‌ர் எழுதிய‌வ‌ற்றிலிருந்து,

"ஹமாஸ் இயக்கத்தினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதன் பதிலடியாகவே இஸ்ரேல் தாக்கியுள்ளதாகவும், இது மிகவும் நியாயமான தாக்குதல்தான் எனவும் சாவு வியாபாரி, சர்வதேச பயங்கரவாதி ஜார்ஜ் புஷ் ஊளையிட்டுள்ளார்."

"வெள்ளை மாளிகையின் அரியணையின் யார்வந்து அமர்ந்தாலும், பிணம் தின்னி இஸ்ரேலை தன் செல்ல நாயாக வைத்திருப்பார்கள். இந்த ஏவல் நாய் பாலஸ்தீன மக்களின் குறிப்பாக இளம் தலைமுறையாம் பிஞ்சுக் குழந்தைகளின் குரல் வளைகளை கடித்து ரத்தம் குடிப்பதை கண்டு மகிழ்ந்திருப்பார்கள். அமெரிக்காவின் ஆதிக்கத்தில் ஐ.நா. சபையும் வெறும் அறிக்கைகளும், அறிவுரைகளும் மட்டுமே வெளியிட்டு தன் கடமையை முடித்துக்கொள்ளும்"


*******************************

மீண்டும் என்னுடைய கோபத்தை கீழே தொடருகிறேன்.

*ஒன்பதாயிரம் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய‌ சிறைகளில் அடைக்கப் பட்டிருக்கின்றனர்.எல்லா ஜனநாயக நாடுகளிலும் இருப்பதை போன்றே மனித உரிமை கழகங்கள் இஸ்ரேலிலும் இருக்கத் தான் செய்கின்றன.ஆனால் அந்த சிறைகளில் என்ன நடக்கின்ற‌ன‌ என்பதே அந்த‌ ம‌னித‌ உரிமை க‌ழ‌க‌ங்க‌ளுக்கு தெரியாதாம்.

*குண்டுவீச்சில் காயமடைந்த மக்களுக்கு முதலுதவி செய்யக் கூட முடியாத நிலையில்,இஸ்ரேலிய‌ ராணுவ‌ம் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளையும் ஆம்புல‌ன்ஸ் ஊர்திக‌ளையும் தான் பிர‌தான் இலக்காக‌ கொண்டு தாக்கி வ‌ருகிற‌து.

*ஒரு நாட்டை அடியோடு ஒழிக்க‌ வேண்டுமென்றால்,அந்த‌ நாட்டின் ச‌ட்ட‌ம் ஒழுங்கை சீர்குலைத்தால் போதுமான‌து என்ப‌தை ந‌ன்கு அறிந்த‌ இஸ்ர‌வேல‌ர்க‌ள்,ஒரே வார‌த்தில் பால‌ஸ்தீன‌த்தின் 61 காவ‌ல்துறை உய‌ர் அதிகாரிக‌ளை கொன்று குவித்திருக்கின்ற‌ன‌ர்.

*நூற்றுக் கணக்கான பெண்களும் பச்சிளம் குழந்தைகளும் தான் இந்த கொடூர வல்லூறுகளின் முதல் இலக்கு.தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு மருந்தும் உணவும் எடுத்து வந்த லெபனான் நாட்டு கப்பலின் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப் பட்டிருக்கிறது.

இதையெல்லாம் வேண்டுகோள்கள் மட்டுமே விடுத்து விட்டு வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கும், அமெரிக்க கைப் பாவையான ஐ.நா வின் ஆண்மையற்ற தன்மையை என்னவென்று சொல்வது ? சிரியா,ஈரான் போன்ற சிறிய நாடுகளைத் தவிர, இந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பயங்கரவாத அடக்குமுறைகளை எதிர்த்து கேள்வி கேட்க திராணியில்லாத மற்ற அரேபிய‌ நாடுகள், கண்டனம் என்ற ஒற்றைச்சொல்லிலும்,பிரார்த்தனையின் பெயராலும் ஒருவித மெளனம் தான் காக்கின்றன.

உலக அமைதிக்கு ஊறுவிளைக்க கூடிய பயங்கர ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் ஒரு சர்வாதிகாரியைப் பிடிக்கிறேன் என்ற போர்வையில் ஒரு ஈராக் நாட்டையே நாசமாக்க வில்லையா ?? பின்லேடனையும் தாலிபனையும் வேரறுக்கிறேன் பேர்வழி என்று ஆப்கன் தேசத்தையே அழிக்க வில்லையா ?? இன்று இருபது லட்சம் பேர் இராக்கில் அனாதையாக்கப் பட்டிருக்கின்றனர்.இதில் விதவைகளும் குழந்தைகளுமே அதிகம்.ஆப்கன் நிலைமை இதை விட மோசம்.

"என் நாட்டில் அனாதையாக்கப் பட்ட குழ‌ந்தைக‌ளின் சார்பாக‌வும் வித‌வைக‌ளின் சார்பாக‌வும் உனக்கு நானளிக்கும் பரிசு" என்று கூவிக் கொண்டே தான் அந்த 'ஷீ'க்களை புஷ்ஷின் மீது எறிந்திருக்கிறார் முன்தாதர் அல்ஸ‌ய்தி.ஆனால் அந்த விலையுயர்ந்த ஷீக்களுக்கு அந்த முகம் தகுதியானதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

உலகில் அமைதியை ஏற்படுத்துகிறேன் என கூக்குரலிடும் இந்த அமெரிக்க ஓநாய், ஏற்ப‌டுத்துவ‌து ஒருவித மயான அமைதியைத் தான்.எல்லா மக்களையும் கொன்று குவித்து, அடக்கம் செய்துவிட்டால் அங்கே அமைதி நிலவாமல் வேறு என்ன நிலவும் ??

பாதிக்கப்படுவது தமிழனாக இருந்தாலும் சரி..பாலஸ்தீனியனாக இருந்தாலும் சரி.யூதனாக இருந்தாலும் சரி..மத,இன,மொழி போன்ற மூக்கு கண்ணாடிகளை கழற்றி வைத்துவிட்டு பார்த்தாலும் இரத்தத்தின் நிறம் எப்போதும் சிவப்பு தான்.

***************************************************************
என்மனதைப் பிழிந்த புகைப்படங்கள் கீழே !!!!! !!!!!


Wednesday, January 14, 2009

இஸ்லாம் X தீவிரவாதம்

"நிச்சயமாக எவன் ஒருவன் ( கொலைக்கு பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தைத் தடுப்பதற்காகவோ அன்றி), மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும் எவர் ஒருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைத்தவர் போலாவார்." 5:32
இது அல்குர் ஆன், ஸூரத்துல் மாயிதா வாயிலாக, இறைவன் கூறும் சத்திய வாக்கு.

இதில் உள்ள ஒரு சிறுபுள்ளியைக் கூட யாராலும் மாற்ற முடியாது.ஆனால் வெறும் ஒன்றரை லட்சம் பணத்துக்காக, இஸ்லாத்தையும் ஜிஹாத் ஐயும் மாற்றி எழுத நினைத்த தீவிரவாதிகள், தாங்கள் கொண்டு வந்த உலர்திராட்சைகளுக்கு தொட்டுக் கொள்ள தேனாக பயன்படுத்தியது இந்திய மக்களின் இரத்தத்தை....

கடந்த மாதம் ஹைதராபாத்தில் நடந்த ஜாமியத் உலமா இ இந்த் பொதுக் கூட்டத்தில்,6000 இஸ்லாமிய தலைவர்கள் ஒன்றுகூடி,இது போன்ற தீவிரவாத வெறியாட்டங்களைக் கண்டித்து, அதற்கெதிராக ஃபத்வா இயற்றியது,தீவிரவாதத்திற்கு எதிரான இஸ்லாத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க ஏதுவாய் அமைந்தது.
ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், சிறுபான்மையினரை வேரறுத்து, அதன் மூலம் சுயலாபம் ஈட்ட எண்ணி,
இதுபோன்ற சம்பவங்களைப் பின்வைத்து தங்கள் காய்களை நகர்த்த ஆயத்தமாகி விடுகின்றனர்.
நெஞ்சுக்கு நேரே வரும் கத்திகளை விட, முதுகுக்கு பின்னே வைக்கப்படும் முட்கள் தான், சிறுபான்மையினரை மட்டுமின்றி, ஜனநாயக சக்திகளையே மிரள வைத்து விடுகின்றன.
எது எப்படி இருப்பினும், இஸ்லாம் மட்டுமல்ல, எந்த ஒரு மதத்திலும் அப்பாவி மக்களைக் கொல்ல அனுமதி இல்லை.ஆனால் தீவிரவாத்தை மதத்தோடு ஒப்பிடுவது, "இஸ்லாமிய தீவிரவாதிகள்" என்று அடைமொழி சூட்டுவது, இந்திய முஸ்லிம்களின் மன நிலையை வெகுவாக பாதித்திருக்கும்.

இஸ்லாம் வேறு பாதை.தீவிரவாதம் வேறு பாதை.
தீவிரவாத்திற்கு எந்த மதமும் கிடையாது.

எறும்பு புற்றுக்கு தீ வைப்பதைக் கூட தடுத்த மார்க்கம் இஸ்லாம்.
போரில் பெண்கள்,குழந்தைகள்,முதியோர்,நிராயுத பாணிகள் இவர்களைத் தாக்கக் கூடாது என்று தடுத்தவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.அது மட்டுமின்றி,
போர்க்கைதிகளைத் துன்புறுத்தாது பொது மன்னிப்பு வழங்கியதாகவும் ஆதாரங்கள் கூறுகின்றன.
அந்த உன்னத நபியை, தன்னை விஷம் வைத்துக் கொல்ல வந்த யூதப் பெண்மனியை மன்னித்த நபியை,
தலை முதல் கால் வரை இரத்தம் சொட்ட சொட்ட கல்லடி பட்ட போது கூட,அந்த தாயிப்ஃ நகரத்து மக்களை மன்னித்த நபியை, வெடிகுண்டுகளுடன் தொடர்பு படுத்தி கார்ட்டூன் வரையத் தூண்டியது இஸ்லாத்தின் குற்றமா?

பல லட்சம் மக்களை கொன்று குவித்த ஹிட்லருக்கு கூட இந்த அளவுக்கு கேலி கிண்டல்கள் செய்யப் பட்டிருக்குமா ? என்பது சந்தேகமே..

இந்து சமயத்திற்கும் இஸ்லாம் மார்க்கத்திற்கும் உள்ள ஒற்றுமைகள்
கிறிஸ்துவத்திற்கும் இஸ்லாத்திற்குமாவது சம்பந்தம் உண்டு,அது எப்படி இந்து சமயத்திற்கும் இஸ்லாத்திற்கும் சாத்தியம் என்று ஆச்சரியமாய் இருக்கிறதா???ஆனால் இது ஒரு சந்தேகமில்லாத உண்மை....

எந்த ஒரு மதத்தைப் பற்றியும் நாம் அறிய வேண்டுமென்றால்,நாம் அந்த மதத்தின் அடிப்படைக் கொள்கைகளையும்,வேதத்தையும் ஆராய வேண்டும்......அந்த மதத்தை பின்பற்றுவோரை பார்த்து அறிவதை விட இதுவே சால சிறந்ததும் அறிவானதுமாகும்........

இந்துக்கள் பல கடவுள் வழிபாடுடையவர்களாக இருப்பதை நாம் பார்க்கிறோம்......ஆனால்,அடிப்படையான வேதங்கள் ஓரிறைக் கொள்கையை எடுத்துரைப்பவை..........

இந்து மத புனித நூல்களில் உயர் அந்தஸ்துடையதாக கருதப்படுபவை வேதங்கள் ஆகும்........வேதங்கள் நான்கு.அவை ரிக் வேதம்,யசூர் வேதம்,சாம வேதம்,அதர்வண வேதம்.

1.யசூர் வேதம்

* " நா தஸ்ய பிரதிம அஸ்தி "

அவனுக்கு எந்தவொரு தோற்றமும் கிடையாது.
( யசூர் வேதம் 32:3 )

* அவன் உருவமற்றவனும் பரிசுத்தமானவனும் ஆவான்
( யசூர் வேதம் 40:8 )

இதையேதான் திருக்குர்ஆன் (42:11),

" அவனைப் போன்று எப்பொருளும் இல்லை" என்கிறது.


* " அன்தாதம ப்ரவிஸன்தி ஏ அசம்பூதி முபாசதே"

எவர்கள் இயற்கை வஸ்துகளை வணங்குகிறார்களோ அவர்கள் இருளில் பிரவேசிக்கிறார்கள்.இன்னும் எவர்கள் மனிதனால் படைக்கப்பட்ட பொருட்களை வணங்குகிறார்களோ அவர்களும் இருளில் ஆழமாக மூழ்குகிறார்கள். ( யசூர் வேதம் 40:9)


அசம்பூதி - இயற்கை வஸ்துக்கள்; காற்று,நீர் போன்றவை........
சம்பூதி - மனிதனால் படைக்கப்பட்டவை; நாற்காலி,சிலைகள் போன்றவை.......


* "எங்களுக்கு நேர்வழியைக் காட்டி வழிகெடுக்கும் பாவங்களிலிருந்து எங்களை நீக்கி வைப்பாயாக" ( யசூர் வேதம் 40:16)

இது யசூர் வேதம் கூறும் பிரார்த்தனையாகும்..........

"நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.(அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல;நெறி தவறியோர் வழியுமல்ல" (திருக்குர்ஆன் 1:5,6,7)


2.அதர்வன வேதம்

* 'தேவ் மஹா ஓசி'

நிச்சயமா கடவுள் மிகப்பெரியவன் ஆவான் ( அதர்வ வேதம் 20:58:3)

இது அதர்வ வேதம் கடவுளைப் புகழும் வரிகள் ஆகும்.......

"அனைத்துப் புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் ( நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்" (திருக்குர்ஆன்1:1)


3.ரிக் வேதம்

* " மா சிதன்யதிவி சன்சதா"
நண்பர்களே!தெய்வீக தன்மை வாய்ந்த அவனையல்லாது வேறு எவரையும் வணங்காதீர்கள்.அவனை மட்டுமே வணங்குங்கள். (ரிக் வேதம் 8:11)

* உண்மையிலேயே தெய்வீக படைப்பாளனின் புகழே பெரியது. (ரிக் வேதம் 5:5:8)

* ஏக இறைவனையே ஞானிகள் பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர்.
( ரிக் வேதம் 1:164:46)

ரிக் வேதம் குறிப்பிடும் இறைவனின் திருப்பெயர்களில் மிக அழகிய திருப்பெயர் 'பிரம்மா' என்பதாகும்.'படைப்பாளன்' என்பது இதன் பொருள்.இதனை அரபியில் மொழி பெய‌ர்ப்போமேயானால் 'கலிக்' என்றாகும்.ஏக இறைவனை 'கலிக்' என்றோ 'படைப்பாளன்' என்றோ 'பிரம்மா' என்றோ அழைப்பதில் முஸ்லிம்களுக்கு எந்த மாற்றுக் க‌ருத்தில்லை........ஆனால் ' பிரம்மாவிற்கு நான்கு தலை உண்டு' என்று கூறுவதையே மறுக்கின்றனர்........ரிக் வேதம் கூறும் மற்றொரு அழகிய திருநாமம் 'விஷ்ணு'.இதன் பொருள் 'பரிபாலிப்பவன்'.இதை அரபியில் மொழிப்பெயர்த்தால் 'ரப்' என்றாகிறது........இறைவனை 'ரப்' என்றோ,'பரிபாலிப்பவன்' என்றோ,'விஷ்ணு' என்றோ கூறுவதில் முஸ்லிம்களுக்கு எந்த மறுப்பும் இல்லை.ஆனால்,'விஷ்ணுவுக்கு நான்கு கைகள் உண்டு.கைகளில் சக்கரமும் சங்குமாக பாம்பில் பள்ளி கொண்டிருப்பவர் ஆவார்' என்பதையே மறுக்கின்றனர்........

இந்த உருவங்களுக்கு அப்பாற்பட்டவனாக இறைவன் இருப்பதினால் முஸ்லிம்கள் அப்பெயரை ஏற்றுக்கொள்வதில்லை........இதனையேதான் யசூர் வேதமும் ( 32:3)

"அவனுக்கு எந்தவொரு உருவமும் கிடையாது" என்கிறது......


4.பிரம்ம சூத்திரம்

"ஏகம் பிரஹம் தவித்ய நாஸ்தே
நஹ்னே நாஸ்தே கின்ஜன்"

இறைவன் ஒருவனே.வேறு இல்லை.இல்லவே இல்லை. என்கிறது......


இவ்வாறாக விருப்புவெறுப்பற்ற நிலையில் இந்து மத கிரந்தங்களைப் படிக்கும் பொழுது அவைகள் ஏக தெய்வக் கொள்கையை கொண்டுள்ளன என அறிந்து கொள்ளலாம்........

Sunday, January 11, 2009

பன்றி இறைச்சி தடை ஏன் ?

பன்றி இறைச்சியை உண்பதால், 70 விதமான, சிறிய மற்றும் பெரிய நோய்கள் உண்டாகின்றன என்பது ஒரு அறிவியல் ரீதியான உண்மை.அதில் முக்கிய‌மான சில வ‌கைககளை ம‌ட்டும் இங்கே பார்ப்போம்.

ம‌னித‌ உட‌லில் ஏற்கென‌வே ப‌ல்வ‌கை புழுஇன‌ங்க‌ள் ப‌ல‌ நாட்க‌ளாக‌ விருந்தாளி போல‌ குடியிருந்து வ‌ருகின்ற‌ன என்று ப‌ள்ளி பாட‌ புத்தக‌ங்களிலேயே நாம் ப‌டித்திருக்கிறோம்.சில‌ புழுக்க‌ள் ந‌ம் உட‌ல் செரிமான‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுகின்றன‌ என்ப‌தும் நாம‌றிந்த‌ செய்தியே...
"டேனியா சோலிய‌ம்" Taenia solium (pork tapeworm) என்ற‌வொரு புழு, ப‌ன்றி இறைச்சியை உண்ப‌தால் ந‌ம் உண‌வுக்குழ‌லின் அடிபாகத்தில் வாட‌கையின்றி குடியேறி விடுகிறது.

"Taenia solium (pork tapeworm). The adult lives in the small intestine of man that is the definitive host. Segments of the worm pass through the anus and release large numbers of eggs that can survive for long periods outside of the body. When ingested by pigs, the eggs hatch and each releases an oncosphere that migrates through the intestinal wall and blood vessels to reach striated muscle where encystment occurs. Even when well adequately cooked pig meat is eaten by man, excystment occurs in the small intestine and an adult cestode (worm) develops. If the eggs are released into the upper intestine of man (e.g. through regurgitation) they can invade the host setting up a potentially dangerous larval infection known as cysticercosis in muscle and other sites."

இந்த டேனியா சோலியம் ,அதே பகுதியில் (Ova) தன் முட்டைகளை இடுகிறது. இந்த முட்டைகள் தான் மிகவும் ஆபத்தானவை.இவை மனிதனின் இரத்த நாளங்களில் பயணிப்பதால் அதன் மூலம் எல்லா உறுப்புகளையும் சென்றடைந்து விடுகின்றன.மனித உடல் உறுப்புகளில் எந்த பகுதிக்கு பரவினாலும் அங்கே ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விடுமாம்.இத‌ய‌ம்,மூளை,க‌ண்,நுரையீர‌ல் என‌ எல்லா இட‌ங்க‌ளிலும் இந்த டேனியா சோலிய‌த்தின் முட்டைக‌ள் கைவ‌ரிசை காட்டுகின்ற‌ன.
டேனியா சோலியம் என்ற புழுவைப் போன்றே இன்னுமொரு புழு உயிரினம் "ட்ரிசுரா ட்ரிசுராஸிஸ்" (Trichura Tichurasis) பன்றி மாமிசத்தின் மூலம் தான் மனித உடலில் பரவுகிறது.டேனியா சோலியமும் இந்த ட்ரிசுராவும் ஒரே மாதிரியான குணமுள்ள உறவினர்கள் தான்.
ஆனால் இந்த புழுக்களின் முட்டைகள், பன்றி இறைச்சியை நன்கு சமைத்தப்பதால் இறந்து விடுகின்றன என்பது எல்லோர் மத்தியிலும் இருக்கும் "பொதுவான தவறான கருத்து".அமெரிக்காவில் நடத்தப் பட்ட ஒரு ஆய்வில், ட்ரிசுராஸிஸ் ஆல் பாதிக்கப் பட்ட 24 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டனர்.இதில் 22 பேர் பன்றி மாமிசத்தை நன்கு சமைத்து உண்டவர்கள் தான்.ஆகவே, இந்த புழுக்களின் முட்டையின் சாதாரண் நீரின் (சமையலின் போது) கொதிநிலையில் இறப்பதில்லை.
இதுமட்டுமின்றி பன்றியின் இறைச்சியில் உள்ள மிதமிஞ்சிய கொழுப்பும், ஹார்ட் அட்டாக்,ஹைபர்டென்ஷன் போன்ற‌ பல ஆபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றன.அமெரிக்கா,ஐரோப்பிய கண்டங்களில் வாழும் பாதி விழுக்காடுபேர் "ஹைபர்டென்ஷன்"ஆல் பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற செய்தி ஆச்சரியப்படுவதிற்கில்லை.
நோய்களுக்கான காரணியாக மட்டுமின்றி, அது ஒரு சுகாதாரமற்ற விலங்கினமாகவே சுற்றி வருகிறது.பண்டைய காலங்களில், நாகரீக லெட்ரீன்கள் இல்லாத காரணங்களால் மனித கழிவை சுத்தம் செய்வதற்காகவே பன்றிகள் பயன்படுத்தப் பட்டன.
ஆனால் இப்போதெல்லாம் மேலை நாடுக‌ளில் ந‌ல்ல‌ சுகாதாரமான சூழ்நிலைகளில் தானே ப‌ன்றிக‌ள் வ‌ள‌ர்க்க‌ப் ப‌டுகின்றன? என்று நீங்க‌ள் கேட்க‌லாம்.சுகாதார‌மான‌ சூழ்நிலைக‌ளில் வ‌ள‌ர்க்க‌ப் பட்டாலும் எல்லா ப‌ன்றிக‌ளையும் ஒரே இட‌த்தில் வைப்ப‌தால், அவை த‌ம் இன‌த்தின் க‌ழிவுக‌ளையே உண்டு ம‌கிழ்கின்ற‌ன.ஆக‌, இது ஒரு சுகாதார‌ சீர்கேட்டிற்கும் வ‌ழிகோலும் என்ப‌தில் ஐய‌மில்லை.

பல்வேறு நூற்றாண்டுகளுக்கு முன் அருளப் பெற்ற இறை வேதங்களில் பன்றி இறைச்சி தடை செய்யப் பட்டுள்ளதன் நோக்கம் நம்மைக் கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது.திருக்குர்-ஆனில் நான்கு இடங்களில் இக்கருத்து வலியுறுத்தப் பட்டுள்ளது.இஸ்லாம் மட்டுமின்றி, கிறிஸ்துவர்களின் வேதமாகிய பைபிளிலும் பன்றி இறைச்சியைப் புசிப்பது தடுக்கப் பட்டுள்ளது.

திருக்குர்-ஆன் வசனங்கள் 2:173, 5:3, 6:145 மற்றும் 16:115.
பைபிள் [ Book of Deuteronomy 14:8] Leviticus 11:7-8 ]

****************************************************************
பி.கு: ஒரு சில ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ்ப் பதம் கிடைக்காததால் நான் தொகுத்த தகவல்களை ஆங்கிலத்திலேயே தரவேண்டியதாகிவிட்டது.
****************************************************************