****** WORSHIP THE CREATOR !!!! BUT NOT HIS CREATIONS ******

Monday, January 26, 2009

புரட்சி மார்க்கம் இஸ்லாம் பாகம்-1

"யுத்த நெடியும் ரத்தக் கறைகளும் படிந்த கள்ளிச் செடி மிகுந்த‌ பாலைவனங்களில்
இறைவன் பூச்செண்டு தூவிய‌ த‌ருண‌ம் அது.

ஆயிர‌க் க‌ண‌க்கான‌ மூட‌ந‌ம்பிக்கைக‌ள் விற்கப்பட்ட‌ மாட்டுச் ச‌ந்தையில் ம‌ரிக்கொழுந்து
வீசிய‌ கால‌ம் அது.

பெண்க‌ள் வெறும் இனவிருத்தி சாத‌ன‌ங்க‌ளாக மட்டுமே ப‌ய‌ன்ப‌டுத்த‌ப் ப‌ட்ட, ப‌டிப்ப‌றிவ‌ற்ற மூட‌ர்க‌ளைக் கொண்ட‌ இருண்ட‌ அர‌ப‌க‌த்தில், ஒளிவெள்ள‌ம் தோன்றிய‌ கால‌ம் அது.

பிறந்த‌ பெண்சிசுக்க‌ளையெல்லாம் உயிரோடு ம‌ண்ணில் புதைத்த‌ முட்டாள் ச‌மூக‌த்தை
சீர்ப‌டுத்த ச‌த்தியஜீவன் உதித்த காலம் அது.

எங்கிருந்தோ எடுத்து வ‌ர‌ப்ப‌ட்ட முந்நூறு சிலைக‌ளை வ‌ண‌ங்கி, பிற்போக்கு சிந்த‌னையின் உச்சாணியில் அம‌ர்ந்திருந்த‌ காட்ட‌ர‌பிக‌ளின் வாழ்வை, ஓரிறை ஒர் குடையின் கீழ் நெறிப்ப‌டுத்த,உத்த‌ம ம‌னித‌ம் உதித்த‌ கால‌ம் அது.

ஒட்டுமொத்த அழுக்கையும் க‌ழுவித் துடைக்க, இறைவ‌ன் இப்பூவுல‌குக்கு அனுப்பிய‌ இறுதித் தூத‌ர் முஹ‌ம்ம‌து ந‌பி (ஸல்) அவ‌ர்க‌ள்,ஒரு புர‌ட்சி மார்க்க‌த்தை, இறைவ‌ன் த‌ம‌க்க‌ளித்த‌ வ‌ஹி எனப்ப‌டும் இறைச்செய்தியை, அன்றைய‌ அர‌ப‌க‌த்தில் எத்தி வைக்க‌ ஆர‌ம்பித்த‌ கால‌ம் அது."



இஸ்லாம் என்ற‌ ஒரு அமைதியின் மார்க்க‌த்தை, அந்த புரட்சி மார்க்கத்தை அதைத் த‌வ‌றாக‌ பின்ப‌ற்றுப‌வ‌ர்க‌ளைப் பார்த்து தான் மாற்றும‌த‌ ச‌கோத‌ர‌ர்க‌ள் எடைபோடுகின்ற‌ன‌ர்.

அவ‌ர்க‌ள் இஸ்லாத்தை புரிந்து கொள்வ‌த‌ற்கு முன் சில‌ அடிப்ப‌டை விஷ‌ய‌ங்க‌ளில் த‌ங்க‌ளை தெளிவு ப‌டுத்தி கொள்ளுத‌ல் ந‌ல‌ம்.
அந்த புரிதலை கொணர்வதே இந்த தொடர்பதிவின் நோக்கம்.

ஒரு சிறு கேள்வி ப‌தில் ப‌குதியாக‌ இந்த‌ தொட‌ர்ப‌திவை ஆரம்பிக்கிறேன்.

************************************************
1.குர் ஆன் என்றால் என்ன ??

குர் ஆன் என்பது முழுக்க முழுக்க இறைவனது வசனங்களின் தொகுப்பு.
இது முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு, ஜிப்ரயீல் என்ற ஒரு வானவரின் மூலமாக
கொஞ்சம் கொஞ்சமாக 22 ஆண்டுகளாக அருளப்பெற்றது.

ஆகவே, குர் ஆன் என்ற ஒரு புனித நூல் முஹம்மது நபியோ அல்லது அவர்களின் மற்ற தோழர்களோ எழுதிய ஒன்றல்ல.

அது இறைவ‌னின் வாக்கு.


************************************************

2. ஹதீஸ் என்றால் என்ன ??

ஹதீஸ் என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாய்மொழிச் சொற்களின்
தொகுப்பு.இது ந‌பித் தோழ‌ர்க‌ளால், முற்றிலும் உண்மை என்று அதிகார‌ப் பூர்வமான‌
ஆதார‌ங்க‌ளுட‌ன் தொகுக்க‌ப் ப‌ட்ட‌து.அதனால் ந‌ம்ப‌க‌த் த‌ன்மையின்மை என்ற‌ பேச்சுக்கே இட‌மில்லை.


*************************************************

3.குர் ஆன் ஹதீஸ் இவ‌ற்றுள் முஸ்லிம்க‌ள் எதைப் பின்ப‌ற்ற‌ வேண்டும் ??

இர‌ண்டையுமே பின்ப‌ற்ற‌ வேண்டும்.

குர் ஆன் ஹதீஸ் இவை இர‌ண்டுமே முர‌ண்ப‌ட்ட‌ க‌ருத்துக‌ள‌ல்ல.
இறைவ‌ன் குர் ஆனில் என்ன அருளினானோ, அதையே தான் ந‌பிக‌ள்
வ‌ழிமொழிந்தார்க‌ள்.வாழ்ந்தும் காட்டினார்க‌ள்.


************************************************

இன்ஷா அல்லாஹ் !! கேள்வி பதில் தொடரும்.

(களைகள் பிடுங்கப்படும்...)



6 comments:

  1. \\பெண்க‌ள் வெறும் இனவிருத்தி சாத‌ன‌ங்க‌ளாக மட்டுமே ப‌ய‌ன்ப‌டுத்த‌ப் ப‌ட்ட\\

    இன்னும் பல இடங்களில் இருக்கே சகோதரா

    ReplyDelete
  2. Nice keep it up!!! And kindly answer to my questions?
    1.Why should we have to follow quran?
    2.Why should we have to accept Islam as one religion other than anything else?
    3.If it is in such case will it lead to peace among humans? if yes....Then why islamic countries fight each others?
    4.what will be the position of eskimos who had not heared about Islam?

    ReplyDelete
  3. //நட்புடன் ஜமால் said...
    \\பெண்க‌ள் வெறும் இனவிருத்தி சாத‌ன‌ங்க‌ளாக மட்டுமே ப‌ய‌ன்ப‌டுத்த‌ப் ப‌ட்ட\\

    இன்னும் பல இடங்களில் இருக்கே சகோதரா
    //

    நிச்சயமாக...அந்த பிற்போக்கு சிந்தனைகளையெல்லாம் முறியடிப்பதற்கு
    என்ன தீர்வு இருக்கிறது என்பதைப் பற்றி சிந்திக்க நாம் கடமைப் பட்டிருக்கிறோம்.

    ந‌ன்றி ஜ‌மால்..த‌ங்க‌ள் வ‌ருகைக்கும் க‌ருத்துக‌ளுக்கும்...

    ReplyDelete
  4. Kasthuri,

    Thanks for visiting our blog.
    We ll make an exclusive article to respond for your queries.(Insha Allah)

    Visit again..!!!!!

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும்
    இன்று தான் உங்கள் blogs சை பார்க்கிறேன். மாஷாஅல்லாஹ் நிறைய விசயங்கள் சொல்லியிருக்கிங்க.
    நானும் இதன் மூலம் பல விஷயங்கள் தெரிந்துக்கொண்டேன்.
    அல்ஹம்துல்லா..

    ReplyDelete
  6. //Mrs.Faizakader said...
    அஸ்ஸலாமு அலைக்கும்
    இன்று தான் உங்கள் blogs சை பார்க்கிறேன். மாஷாஅல்லாஹ் நிறைய விசயங்கள் சொல்லியிருக்கிங்க.
    நானும் இதன் மூலம் பல விஷயங்கள் தெரிந்துக்கொண்டேன்.
    அல்ஹம்துல்லா..
    //

    JaZak Allah Mrs.Faizakader

    வருகைக்கும் மேலான கருத்துகளுக்கும் மிக்க நன்றி !!!

    ReplyDelete