ஓரிறை,ஓர் வேதம் என ஏகத்துவத்தை பின்பற்றும் இஸ்லாமியர்கள் ஏன் ஹனபி,ஷாபி(இந்தியாவில்), சன்னி,ஷியா ( இராக்கில்) என பல்வேறு குழுக்களாக பிரிந்து கிடக்கின்றனரே.இந்த பிரிவினைகளை இஸ்லாம் ஆதரிக்கிறதா?? இஸ்லாத்தில் சாதீயம் என்ற ஒரு கருத்து இருக்கிறதா ??
இதற்கு பதில் "நிச்சயமாக இல்லை" என்பதே.மேலும் இந்த நெறிமுறைகளின் வீரியம் கொஞ்சம் அதிகம்.
இதற்கான ஆணித்தரமான விடையையும் திருக்குர்ஆனில் அல்லாஹ் தருகிறான்.
"நிச்சயமாக எவர் தம்முடைய மார்க்கத்தை ( தம் விருப்பப்படி பலவாறாகப் பிரித்து) பல குழுக்களாக பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே !) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை;அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது.அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்."
6:159 ஸூரத்துல் அன் ஆம்.
மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது சந்ததியினர் 72 பிரிவுகளாக பிரிந்து பிளவுபடுவார்கள் என கணித்துள்ளார்.அவர்கள் அனைவரும் நரக நெருப்பில் விழக் கடவது எனவும் சபித்துள்ளார்கள்.இவைகள் மட்டுமின்றி அல் குர் ஆனில் பல்வேறு இடங்களில் இறைவன் இதே கருத்தை வலியுறுத்துகிறான்.
ஆகவே,இஸ்லாம் என்ற ஒரு நன்னெறி மார்க்கத்தில் பிரிவினைகளும் ஏற்றத்தாழ்வுகளும் இல்லை.சாதிகளோ குழுக்களோ இல்லை.உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லை.
யாரோடு யார் வேண்டுமானாலும் தோளோடு தோள் சேர்த்து மஸ்ஜிதில் தொழலாம்.
குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்தான் தொழுகை நடத்த வேண்டும் என்ற உயர்சாதிய கோட்பாடுகள் இங்கு செல்லாது.இஸ்லாத்தை ஏற்று கொண்ட ஒரு தலித்து கூட ( விஷயம் தெரிந்திருக்கும் பட்சத்தில் ) மறுகணமே
தொழுகை நடத்தலாம்.
மேற்கூறிய சன்னி,ஷியா,போரா போன்றவை இஸ்லாத்தை தவறாக பின்பற்றும் மனிதர்களால் உருவாக்கப் பட்ட பிரிவினைகளேயன்றி, அவை இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு நேர்முரணானவை.
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வாங்கிய போது கருப்பர் என்ற நிறவெறியின் காரணமாக அமெரிக்க அரசால் நிராகரிக்கப் பட்ட குத்துச்சண்டை வீரர் கேஸியஸ் கிளே, ஓக்லஹாமா நதியில் தனது பதக்கத்தை தூக்கி வீசிவிட்டு பிற்காலத்தில் முஹம்மது அலியாக மாறியதற்கு காரணங்கள் இல்லாமலில்லை.மதங்கள் மட்டுமே பிரிவினையை வளர்க்கின்றன என கூக்குரலிடும் நாத்திகர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று மட்டுமே.
இஸ்லாத்தில் சாதிகள் இல்லை.
*****************************************************************************
Sunday, May 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
many people have this misconseption and this is a frequently asked question....very useful post sayed.........jazakallah...
ReplyDeleteHyrunlakum Vaals !!!!
ReplyDeleteபொட்டுல அடிச்ச மாதிரி தெளிவான பதிவு போட்டு இருக்கீங்க செய்யது. இஸ்லாத்தில் சாதிகள் பற்றிய சந்தேகங்கள் உள்ளவர்களுக்கு இது ஒரு தெளிவான விளக்கம்.
ReplyDeleteசிறு சந்தேகம் ,எங்கள் வீட்டுக்கருகில் இருக்கும் ஒரு இஸ்லாம் சகோதரர் தம்மை ராவுத்தர் என கூறிக்கொள்கிறார் ,அது சாதி இல்லையா? !
ReplyDeleteநல்ல பதிவு சகோதரரே.வாழ்த்துக்கள்.
ReplyDelete