****** WORSHIP THE CREATOR !!!! BUT NOT HIS CREATIONS ******

Sunday, February 1, 2009

நாம் வெறும் பெயர் தாங்கி முஸ்லிம்களா???ஒரு சுய அலசல்.......part 2




"and do not make your hand (as) chained to your neck or extend it completely and (thereby) become blamed and insolent" [17:29]


எவ்வளவு அற்பதமான,அவசியமான வரிகள்........நாம் கைகளைக் கழுத்தோடு கட்டிக் கொள்ளவும் கூடாது,ஒரே அடியாய் விரித்து விடவும் கூடாது.அப்படியென்றால் நாம் இரண்டுக்கும் நடுநிலையாய் சிக்கணமாக இருக்க வேண்டும்........ஆனால்,நம்மில் பலரும் இப்படியா நடந்து கொள்கிறோம்????ஒன்று பணத்தை வாங்கி வாங்கி பீரோவில் பூட்டி வைத்துக் கொண்டு, கேட்கிறவர்களிடமெல்லாம் கையை விரிக்கின்றோம் இல்லையென்றால் தாட் பூட் என்று தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் பணத்தை வாரி இரைத்து நம்மிடமும் பணம் இருக்கிறதென காட்டி கொள்கிறோம்..........



"O you who have believed,let not a people ridicule (another) people;perhaps they may be better than them;nor let women ridicule (other) women; perhaps they may be better than them.And do not insult one another and do not call each other by (offensive) nick names wretched is the name (i.e. mention) of disobeidience after (one's) faith.And whoever does not repent then it is those who are the wrongdoers" [49:11]



நாம் எத்தனை பேரை கேலி பேசியிருக்கிறோம்???எத்தனை கிண்டல்கள்????

நான் சொல்வது மற்றவரை புன்படுத்தும் வகையராக்கள்..........எத்தனை பேரை அவமான படுத்தியிருக்கிறோம்????இவற்றையெல்லாம் இப்பொழுதே விட்டொழித்து பாவ மன்னிப்புக் கோரி விடுவது best இல்லையா????சிந்தியுங்கள்................



"O you who have believed,avoid much (negative) assumption.Indeed,some assumption is sin.And do not spy or backbite each other.would one of you like to eat the flesh of his brother when dead? you would detest it.And fear Allah ; indeed,Allah is accepting of repentence and merciful" [49:12]



இவன் இப்படி தான்,இவ தான் செஞ்சிருப்பா,இது இப்படி தான் நடந்திருக்கும்.......we jump in to conclusions ourselves;but do we analyse our conclusions????நிச்சயமாக அவற்றில் பல உண்மையல்லாத நம் வெற்று ஊகங்கள்தான்........அடுத்த வீட்டுக் காரன் எத்தனை மணிக்கு வந்தால் நமக்கென்ன அல்லது எதிர் வீட்டில் எத்தனை மணிவரை விளக்கெரிந்தால் நமக்கென்ன???ஆனால் அதனை துருவி துருவி ஆராய்ந்து அதனை பற்றி மற்றவரிடம் headlines வாசிக்கும் போது எவ்வளவு சந்தோஷம் நமக்கு............Oh God.,நாம் சர்வ சாதாரனமாக செய்துக் கொண்டிருக்கும் இந்த காரியத்திற்கு இறைவன் கொடுக்கும் உதாரனத்தை யோசித்துப் பாருங்கள்???அருவருப்பாய் இருக்கிறதல்லவா????? இப்படிப் பட்டதை தொடர வேண்டுமா?????


சிந்தியுங்கள்.....................................மீண்டும் சில அடுத்த பதிவில்...................

No comments:

Post a Comment