1. " இன்னும் : மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல் ) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான்.அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்.ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின் அவன் ( தன் முகத்தை ) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்;இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான்.இதுதான் தெளிவான நஷ்டமாகும்." ( 22 :11 )
சுபஹானல்லாஹ்......இது நம்முடைய வாழ்வு முறையோடு எவ்வளவு பொருந்துகிறது.நம்மை திருத்திக் கொண்டு நஷ்டத்திலிருந்து தவிர்ந்து கொள்வோம்.......
2. " அன்றியும்,அவர்கள் பொய் சாட்சி சொல்ல மாட்டார்கள்; மேலும்,அவர்கள் வீனான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்." ( 25:72 )
சின்ன சின்ன விஷயங்களில்கூட நாம் பொய்க்கு துணைப் போக கூடாது.வீணான காரியம் என்றால் வெட்டிப் பேச்சு, ஊர் வம்பு போன்ற காரியங்களும் தானே..........
3." (பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே ! பூமியில் பெருமையாகவும் நடக்காதே ! அகப்பெருமைக்காரர்,ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்" ( 31 : 18 )
4. " உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசலாட்டம் ( தீயதைச் செய்ய ) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக ! நிச்சயமாக அவன் ( யாவற்றையும்) செவியேற்பவன் ; நன்கறிபவன்" ( 41 : 36 )
இது நமக்கு அடிக்கடி நடப்பதுதான்.அதாவது கெட்ட எண்ணம் அல்லது தூண்டுதல்.அதற்கான solutionதான் மேற்கூறிய வசணம்............
Jazak Allah vaals !!!!!
ReplyDeleteGud work !!!
நல்ல ஒரு பகிர்வு
ReplyDeleteஜஸாக்கல்லாஹ்.
@செய்யது , ஜமால் காக்கா
ReplyDeletehyrunlakum............
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteமிகவும் அருமையான வரிகள்
waalaikum salam Mrs.faizakader..
ReplyDeletethank you...jazakallah khair