****** WORSHIP THE CREATOR !!!! BUT NOT HIS CREATIONS ******

Monday, February 9, 2009

புரட்சி மார்க்கம் இஸ்லாம் பாகம்-2

கடந்த பாகத்தில் சகோதரி ஒருவர் கேட்ட கேள்விகளுள் முதல் இரண்டிற்கான
பதிலகள்.

1.Why should we have to follow quran?


எல்லா மார்க்க புனித நூல்களும் ஏறத்தாழ ஒரே மாதிரியான அடிப்படை கொள்கைகளைத்தான் பெற்றிருக்கின்றன.எல்லா வேதங்களும் நற்காரியங்களை முன்னிலைப் படுத்தியும்,தீயவைகளை இகழ்ந்தும் தான் போதனைகளை மேற்கொள்கின்றன.
இப்படி இருக்கும் பட்சத்தில் குர் ஆன் எந்த அளவில் உயர்ந்து நிற்கிறது ??
குர்-ஆன் க்கும் மற்ற வேதங்களுக்கும் அப்படி என்ன வித்தியாசம் இருக்கப்
போகிறது.என்றெல்லாம் கேள்வி எழலாம்.

தீயவற்றைச் சாடுவது மட்டுமின்றி அதிலிருந்து ஒரு மனிதன் எப்படி விடுபடலாம்
என்ற நடைமுறை தீர்வுகளும் குர் ஆனில் கொட்டிக் கிடக்கிறது.
இது போன்ற "பிராக்டிகல் சொல்யூஷன்கள்" தான் மற்ற மார்க்க நூல்களையும்
குர் ஆனையும் வேறுபடுத்தி காட்டுகிறது.

எடுத்துக்காட்டாக, திருட்டை எடுத்து கொள்வோம்.

அடுத்தவர் பொருளை அபகரிப்பது குற்றம்..அனுமதியின்றி மற்றவர் சொத்துக்களை
திருடுதல் பாவம் என்று எல்லா நூல்களும் தான் சொல்கின்றன.ஆனால் திருடியவனுக்கு என்ன தண்டனை வழங்கப் படவேண்டும்.இந்த மாதிரியானதண்டனைகள் திருட்டை எந்த அளவில் முற்றிலும் ஒழிக்கப் பயன்படும் என்பதை குர்-ஆன் தெளிவாக விளக்குகிறது.

"திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு,அல்லாஹ்விடமிருந்து தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள்." (5:38)

"இது என்ன ஒரு பழமைத்துவ காட்டுமிராண்டித் தனம்" என்று கேள்வியெழுப்பும்
பகுத்தறிவு பகலவன்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம்,

அதே குர் ஆனில் தான் 31 தடவை ஜகாத் என்னும் தானதர்மம் குறித்து
அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டுள்ளது.85 கிராம் தங்கமும் அல்லது அதற்கிணையான
மதிப்புள்ள பணமோ வைத்திருக்கும் ஒவ்வொரு தனிமனிதனும்,ஆண்டொன்றுக்கு ஒருமுறை அவர்தம் சொத்திலிருந்து, 2.5% சதவீதம் கண்டிப்பாக ஏழை எளிய மக்களுக்கு தானம் தர்மம் செய்தாக வேண்டும்.இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் ஜகாத் ஐ பின்பற்றினால்,வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்களின் எண்ணிக்கையை பெருமளவிற்கு குறைக்கலாமில்லையா ???

இன்னும் பர்தா எனப்படும் ஹிஜாப் இன் சட்டமும், பெண்களுக்கெதிரான
சில இழிசெயல்களைத் தடுக்கும் ஒரு நல்ல தீர்வு என்று சொன்னால் அது மிகையாகாது.
பெண்களை மட்டும் தங்கள் உடலை மறைத்து பாதுகாக்கச் சொல்லும் குர் ஆன்
ஆண்களை கண்டிக்காமல் விட்டு விட்டதா என்று கேட்போருக்கு இன்னொரு விஷயம்

நபியே முஃமினான‌ ஆண்க‌ளுக்கு நீர் கூறுவீராக !!! அவர்கள் தங்கள் பார்வைகளை
தாழ்த்தி கொள்ள வேண்டும்.தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்து கொள்ள வேண்டும்..(24:30)

இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக !! அவர்கள் தங்கள் பார்வைகளை
தாழ்த்தி கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்து கொள்ள வேண்டும்..(24:31)

பெண்களுக்கு அறிவுரை கூறும் ஒரு வசனத்திற்கு முன்பே, ஆண்களும் எவ்வாறு
நடந்து கொள்ள வேண்டும் என்று குர் ஆன் சொல்லி விட்டது.

திருக்குரான் மட்டும் தான் உலகம் உள்ளளவும்,எல்லா காலகட்டங்களிலும் வாழும் மனித சமுதாயத்திற்கு பொருந்தும் வகையிலும் அருளப் பெற்றுள்ளது.மனித குலத்தின் அனைத்து குழப்பங்களுக்கும் குர் ஆனில் தீர்வு உள்ளது.மற்ற வேதங்களைப் போலன்றி,மனிதர்களின் இடைச் செருகல்களும்,புனைவுச் சித்திரங்களாகவும் இல்லாமல் முழுக்க முழுக்க இறைவனின் வார்த்தைகளாக, அப்பழுக்கற்றதொரு நூலாக குர் ஆன் விளங்குகிறது. ஆகவே காலத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு புனித நூலாக மட்டுமின்றி,
ஓரிறை கொள்கை,ஆட்சி முறை,அறிவியல்,சமூகம்,குடும்பவியல்
ஆகிய மனித குலத்திற்கு தேவையான எல்லா கல்வியையும் வலியுறுத்தும்
ஒரு அற்புத வழிகாட்டியாகவும் குர் ஆன் திகழ்கிறது.
2.Why should we have to accept Islam as one religion other than anything else?

இந்த கேள்விக்கு விடையளிக்குமுன் பா.ராகவன் எழுதிய 'நிலமெல்லாம் ரத்தம்'
என்ற புத்தகத்தில் அவர் இஸ்லாம் குறித்தும்,முஹம்மது நபி(ஸல்) அவர்களைப்
பற்றியும் குறிப்பிட்டிருந்த பகுதிகளில் சில உங்கள் பார்வைக்கு..

"மற்ற இறைத்தூதர்களைப் பற்றிய தகவல்களுக்கு நாம் புராணக் கதைகளையே ஆதாரங்களாகக் கொள்ள வேண்டியிருக்கிற நிலையில், இவர் ஒருவரைக் குறித்த விவரங்களை மட்டும்தான் கதைகளிலிருந்து அல்லாமல், சரித்திரத்தின் பக்கங்களிலிருந்தே நாம் பெற முடிகிறது. காலத்தால் நமக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது மட்டுமே இதற்குக் காரணமல்ல. அவரது காலத்தில் வாழ்ந்தவர்கள், அவருடன் நேரில் பழகியவர்கள், அவரது பிரசங்கங்களை, போதனைகளைக் கேட்டவர்கள் எழுதிவைத்த குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன. முகம்மது குறித்த ஒவ்வொரு தகவலும் பல்வேறு நிலைகளில் சரிபார்க்கப்பட்டு, ஒப்புநோக்கப்பட்டு, அவருடன் நேரடியாகப் பழகியவர்கள் விவரித்துள்ளவற்றுடன் பொருந்தினால் மட்டுமே அச்சேறின. இதனால், முகம்மது குறித்த விவரங்களின் நம்பகத்தன்மை பற்றிய அத்தனை கேள்விகளும் அடிபட்டுப் போய்விடுகின்றன. ஆதாரம் இல்லாத ஒரு குட்டிக்கதை, கதையின் ஒருவரி... ஒரு சொல் கூடக் கிடையாது.இதன் அடிப்படையில்தான் இப்படியொரு முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது."

எனவே நம்பகத் தன்மை குறித்த சந்தேகங்களில் முதலில் தெளிவு பெறுகிறோம்.

இறைவனின் கட்டளைக் கிணங்க,முஹம்மது நபியவர்கள் சொன்னது மிகவும் எளிய
வாழ்வியல் முறைகள்.

ஓரிறையை வணங்குங்கள்.அவனுக்கு இணை வைக்காதீர்கள்.
தொழுகையை நிறைவேற்றுங்கள்.

விரதமிருங்கள்.ஏழை எளிய மக்களுக்கு ஜகாத் மூலம் உங்கள் செல்வத்தில் ஒரு பகுதியை
தானமாக கொடுங்கள்.

உடல் நலனும் பொருள் வசதியும் உள்ளவர்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும்
ஹஜ் செய்யுங்கள். அவ்வளவே !!!

இஸ்லாத்தை ஒரு மதமாக எண்ணாமல்,இப்படித்தான்
வாழ வேண்டும் என்ற ஒரு கடினமான மனப்போக்குடன் இல்லாமல்,நல்ல நெறிமுறைகளை போதிக்கக்கூடிய ஒரு மார்க்கமாக, இப்படியும் வாழலாம் என தெளிவுபடுத்திய ஒரு மார்க்கமாக எண்ணி பின்பற்றுவோர் மீது இறைவனின் சாந்தியும்
சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக !!!!


விடைகள் தங்களுக்கு திருப்தியளிக்க வில்லையென்றால்,பின்னூட்டத்தில்
தெரிவிக்கவும்.மீண்டும் ஒருமுறை விளக்க முயலுவோம்.

மீதமுள்ள இரண்டு கேள்விகளுக்கான விடைகள் அடுத்த பாகத்தில் ( இறைவன் நாடினால்.. )

No comments:

Post a Comment