நம் பெயர்கள் அரபு பெயர்களாகவும்,நாம் தொப்பி வைத்துக் கொள்வதாலும்,தாடி வைத்துக் கொள்வதாலும் அல்லது பர்தா அணிந்துக் கொள்வதாலும் நாம் முஸ்லிம்களாகி விடுவோமா????அப்படியென்றால் சுவர்க்கம் எளிதாக அடைந்து விடக் கூடிய இடமாகிடுமே........????அப்படியென்றால் நம் முன்னால் சென்ற நபிமார்களும் , நபிதோழர்களும் ஏன் தங்கள் வாழ்வின் சாதாரண நிகழ்வுகளைக் கூட இது சரியா தவறா என கவனமாக ஆராய்ந்து செய்தனர்????ஒருவேளை நாம் up to the mark இல்லையோ????அல்லது நாம் வெறும் பெயர் தாங்கி முஸ்லிம்களா????காலம் கடந்து விடுவதற்குள் நாம் இதனை தெளிவுப் படுத்திக் கொள்வோமே............
நமக்கான instruction manual-லான திருக்குர்ஆனில் நம்மை படைத்த இறைவன் நாம் எப்படி இருக்க வேண்டும் என்கிறான்.....நாம் எப்படி இருக்கிறோம் என திறந்த மனதுடன்,உண்மையாக,relax-ஆக நாம் ஒவ்வொருவரும் ஒரு சுய அலசலில் ஈடுபட வேண்டும்........................
"who believe in the unseen,are steadfast in prayer,and spend out of what we have provided for them;" (1:3)
முஸ்லிம்கள் தொழுகையைக் கடைப்பிடிப்பார்கள்,ஜகாதையும் முறையாகக் கொடுப்பார்கள் என இன்னும் பல இடங்களிலும் இறைவன் கூறுகிறான்........ஆனால்,நாம் எப்படி இருக்கிறோம்???
தொழுகையை முறையாக அதற்குறிய நேரத்தில் தொழுகிறோமா அல்லது cricket,serial,shopping,business என்று தள்ளிப் போடுகிறோமா??? ஜகாத் இன்றுவரைக்கும் என்னைப் பொறுத்தவரை என் அப்பா அம்மா department.....என் போன்றோர் முடிந்தவரை தங்கள் pocket moneyஇல் மற்றவர்களுக்கு உதவலாம் அல்லது தன் வசம் உள்ள உடைகள்,பொருட்கள்,அறிவு ஆகியவற்றாலும் உதவலாம்........ஜகாத் கொடுக்க முடிந்தவர்கள் முறையாகக் கணக்கிட்டுக் கொடுக்கிறீர்களா அல்லது குத்துமதிப்பா இரண்டாயிரத்து சொச்சம் என கொடுப்பீர்களா????
"guard strictly your (habit of) prayers,especially the middle prayer;and stand before God in a devout (frame of mind)" [2:238]
நடுத்தொழுகையை அஸர் தொழுகை என எடுத்துக் கொண்டால், நம்மில் பலருக்கு school,college,businessஆல் அதிகம் கட்டாவது லுஹரும் அஸரும் தான்.................
"and your Lord has decreed that you not worship except Him,and to your parents;good treatment.whether one or both of them reach old age (while) with you,say not to them (so much as ) "uff" and do not repel them but speak to them a noble word" [17:23]
நம் அம்மா அப்பாவிடம் நாம் எவ்வாறு நடந்துக் கொள்கிறோம்???வயதானவர்களை துரத்திவிடாமல் அன்புடன் நடத்துகிறோமா???"uff" என்றுக் கூட சொல்லக் கூடாதெனும் போது,நாம் பயங்கரமாக திட்டுகிறோமே அது????
"and tell my servants to say that which is best.........." [17:53]
உரிய அழகான வார்த்தைகளை மட்டும் தான் நாம் பேசுகிறோமா???நாம் பேசுவதில் எத்தனையோ அர்த்தமற்ற தேவையில்லாத வார்த்தைகள் இருக்கின்றனவே????
"and be moderate in your pace and lower your voice;indeed , the most disagreeble of sounds is the voice of the donkeys" [31:19]
எத்தனை அழகாக நம்மை நாசூக்காக நடந்துக் கொள்ள சொல்கிறான் நம்மை படைத்தவன்........
இவற்றையெல்லாம் சிந்தியுங்கள்.........உங்களை நீங்களே அலசுங்கள்.........தவறைத் திருத்திக் கொள்ளுங்கள்.........
மேலும் சில அடுத்த பதிவில்.............
கொஞ்சம் கொஞ்சமா சொல்லுங்க ...
ReplyDelete@ஜமால்
ReplyDeleteசரிங்க ஜமால்......
கருத்துக்கு நன்றி......
thotarattum ungkal thavaa ena thuaa seykiren
ReplyDeletejazakallah taj.....
ReplyDelete