****** WORSHIP THE CREATOR !!!! BUT NOT HIS CREATIONS ******

Wednesday, January 14, 2009

இஸ்லாம் X தீவிரவாதம்

"நிச்சயமாக எவன் ஒருவன் ( கொலைக்கு பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தைத் தடுப்பதற்காகவோ அன்றி), மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும் எவர் ஒருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைத்தவர் போலாவார்." 5:32
இது அல்குர் ஆன், ஸூரத்துல் மாயிதா வாயிலாக, இறைவன் கூறும் சத்திய வாக்கு.

இதில் உள்ள ஒரு சிறுபுள்ளியைக் கூட யாராலும் மாற்ற முடியாது.ஆனால் வெறும் ஒன்றரை லட்சம் பணத்துக்காக, இஸ்லாத்தையும் ஜிஹாத் ஐயும் மாற்றி எழுத நினைத்த தீவிரவாதிகள், தாங்கள் கொண்டு வந்த உலர்திராட்சைகளுக்கு தொட்டுக் கொள்ள தேனாக பயன்படுத்தியது இந்திய மக்களின் இரத்தத்தை....

கடந்த மாதம் ஹைதராபாத்தில் நடந்த ஜாமியத் உலமா இ இந்த் பொதுக் கூட்டத்தில்,6000 இஸ்லாமிய தலைவர்கள் ஒன்றுகூடி,இது போன்ற தீவிரவாத வெறியாட்டங்களைக் கண்டித்து, அதற்கெதிராக ஃபத்வா இயற்றியது,தீவிரவாதத்திற்கு எதிரான இஸ்லாத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க ஏதுவாய் அமைந்தது.
ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், சிறுபான்மையினரை வேரறுத்து, அதன் மூலம் சுயலாபம் ஈட்ட எண்ணி,
இதுபோன்ற சம்பவங்களைப் பின்வைத்து தங்கள் காய்களை நகர்த்த ஆயத்தமாகி விடுகின்றனர்.
நெஞ்சுக்கு நேரே வரும் கத்திகளை விட, முதுகுக்கு பின்னே வைக்கப்படும் முட்கள் தான், சிறுபான்மையினரை மட்டுமின்றி, ஜனநாயக சக்திகளையே மிரள வைத்து விடுகின்றன.
எது எப்படி இருப்பினும், இஸ்லாம் மட்டுமல்ல, எந்த ஒரு மதத்திலும் அப்பாவி மக்களைக் கொல்ல அனுமதி இல்லை.ஆனால் தீவிரவாத்தை மதத்தோடு ஒப்பிடுவது, "இஸ்லாமிய தீவிரவாதிகள்" என்று அடைமொழி சூட்டுவது, இந்திய முஸ்லிம்களின் மன நிலையை வெகுவாக பாதித்திருக்கும்.

இஸ்லாம் வேறு பாதை.தீவிரவாதம் வேறு பாதை.
தீவிரவாத்திற்கு எந்த மதமும் கிடையாது.

எறும்பு புற்றுக்கு தீ வைப்பதைக் கூட தடுத்த மார்க்கம் இஸ்லாம்.
போரில் பெண்கள்,குழந்தைகள்,முதியோர்,நிராயுத பாணிகள் இவர்களைத் தாக்கக் கூடாது என்று தடுத்தவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.அது மட்டுமின்றி,
போர்க்கைதிகளைத் துன்புறுத்தாது பொது மன்னிப்பு வழங்கியதாகவும் ஆதாரங்கள் கூறுகின்றன.
அந்த உன்னத நபியை, தன்னை விஷம் வைத்துக் கொல்ல வந்த யூதப் பெண்மனியை மன்னித்த நபியை,
தலை முதல் கால் வரை இரத்தம் சொட்ட சொட்ட கல்லடி பட்ட போது கூட,அந்த தாயிப்ஃ நகரத்து மக்களை மன்னித்த நபியை, வெடிகுண்டுகளுடன் தொடர்பு படுத்தி கார்ட்டூன் வரையத் தூண்டியது இஸ்லாத்தின் குற்றமா?

பல லட்சம் மக்களை கொன்று குவித்த ஹிட்லருக்கு கூட இந்த அளவுக்கு கேலி கிண்டல்கள் செய்யப் பட்டிருக்குமா ? என்பது சந்தேகமே..

No comments:

Post a Comment