Friday, January 31, 2020
இந்தியா ஒரு வல்லரசின் கதை....
இந்தியா,நம் தாய் நாடு...பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நாகரிகத்தின் படிக்கட்டுகளில் மனித சமுதாயம் ஏற முயற்சி செய்துக் கொண்டிருந்த காலக் கட்டத்திலேயே பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கிய தேசம்...ஆதார பூர்வமான ஹதீஸ்கள் இல்லையென்றாலும் பல அறிஞர்களின் கருத்துப்படி பார்த்தால் ஆதம் (அலை) முதன் முதலில் இறங்கிய இடமாகவும் இருக்க கூடும்..ஆனால் அந்த நிலபரப்பு இப்பொழுது உள்ள இந்தியா அல்ல இலங்கையையும் உள்ளடக்கிய குமரி காண்டம் எனவும் கருத்து உண்டு..அனைத்தையும் படைத்த வல்ல இறைவனே இதனை அதிகம் அறிந்தவன்....எது எப்படியோ அந்த காலம் தொட்டே அனைத்து வளங்களும் நிறைந்த ஒரு நிலபரப்பாகவே இது இருந்துள்ளது...இத்தனை பெருமைக்குறிய நம் தேசத்தின் வரலாறை நாம் தெரிந்து கொள்வது அவசியமானது அல்லவா??!!!வருகிற பதிவுகளில் இந்தியா என்ற வல்லரசின்,பல நாடுகளின் மன்னர்களை ஆசைக் கொண்டு படையெடுக்க வைத்த இந்த அழகிய பூமியின் வரலாறை அறிந்துக்கொள்ள முயல்வோம்.....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment