****** WORSHIP THE CREATOR !!!! BUT NOT HIS CREATIONS ******

Friday, January 24, 2020

குழந்தை வளர்ப்பு 2

நான் எழுதிய குழந்தை வளர்ப்பு முதல் பாகத்திற்க்கும் இந்த இரண்டாம் பாகத்திற்கும் பத்து ஆண்டுகள் இடைவெளி....இந்த பத்து வருஷத்துல எவ்ளோ மாறியிருக்கு இல்ல..அப்போ மொபைல்ல வெறும் கேம் மட்டும் தான் பிள்ளைங்க விளையாடுவாங்க.அதுவே கொஞ்சம் டேஞ்சர் .இப்போ you tube,face book,twitter ன்னு எங்கேயோ போயிட்டிருக்காங்க...இந்த அப்பா அம்மாக்கு இதுல ஒரு பெருமை வேற....ஒன்னு புரிஞ்சுக்கோங்க ,இந்த mobile technology விஷயத்துல நம்மள விட நம்ம பிள்ளைங்களுக்கு நிறைய தெரிஞ்சுதுன்னா அதுல நமக்கு பெருமையவிட ஜாக்கிரதை உணர்வு தான் நிறைய வேனும்...இத நம்ம எப்படி handle பண்றோம்ங்கிறது நம்ம பிள்ளைங்களோட வயச பொறுத்து மாறும்..

1..3 வயசு வரைக்கும் பிள்ளைங்க கிட்ட phone குடுக்கவே குடுக்காதீங்க..இது ரொம்ப ரொம்ப முக்கியம்...எங்க சொன்னா கேட்குறாங்க???அப்படீங்கறீங்களா...அவங்க சொன்னா கேட்க மாட்டாங்க..நம்ம phone கிட்ட கொஞ்சம் distance maintain பண்ணோம்னா (at least அவங்களுக்கு முன்னாடி மட்டுமாவது....)நம்மள அப்படியே copy பண்ணுவாங்க..

2..3 வயசுக்கு மேல அவங்க school போக ஆரம்பிப்பாங்க..அப்போ ரொம்ப control பண்ண முடியாது..ஏன்னா அவங்களுக்கும் friends கிடைப்பாங்க..அவங்க mobile,video,rhymes,games அது இதுன்னு பேசறப்போ நம்ம குழந்தைங்களுக்கு ஒரு curiosity வரும்...அது இயற்கை தான்..அதுக்காக நம்ம அப்படியே விடவும் கூடாது...

3..முடிஞ்ச வரைக்கும் ஒரு குறிப்பிட்ட,குரைந்த மணி நேரத்தை டிவிக்கோ,மொபைலுக்கோ ஒதுக்குங்க...இந்த நேரத்தில் மட்டும் அவர்களை பார்க்க அனுமதியுங்கள்...அவர்களுடன் நீங்களும் சேர்ந்து பாருங்கள்.அவர்கள் என்ன பார்க்க வேண்டும் என்பதை நீங்கள் தேர்வு செய்யுங்கள்..அவர்களை தனியாக பார்க்க அனுமதிக்க வேண்டாம்..(உதாரணத்துக்கு சொல்லனும்னா எங்க வீட்டுல டிவி கிடையாது.so என் பையனுக்கு டிவினா அது மொபைல் தான்..அவங்க பாட்டிக்கூட உட்கார்ந்து நியூஸ் பார்ப்பான் இல்லன்னா அவங்க பார்க்கற பழைய கால தத்துவ பாட்டு..எங்க ரெண்டு பேரோட fixed entertainment time மதியம் 2-30 to 3-30..நாங்க ஏதாவது cartoon movie or kids movie பார்ப்போம் இல்லனா ஏதாவது travel vlog...இது தான் அவனோட டைம்.இதுக்கு மேல கிடையாது. அதுவும் நான் கூட இருந்தால் மட்டும் தான்...அவன் அப்பப்ப என்கிட்டயிருந்து எஸ்கேப்பாகி அவன் பாட்டிக்கூட போய் உட்கார்ந்து cartoon பார்ப்பான்..நானும் வேணும்னே கண்டுக்காத மாதிரி விடுவேன்.ஏன்னா அப்ப அப்ப விட்டு பிடிக்கனும்.அப்போ தான் நம்ம பிடியிலேயே இருப்பாங்க..இல்ல ஒரேயடியா அறுத்துட்டு ஓட பார்ப்பாங்க..ஆனா எப்போ விடனும் எப்போ பிடிக்கனும்னு நமக்கு தெரிஞ்சுருக்கனும்..அது நம்ம சாமர்த்தியம்...)

4..கொஞ்சம் வளர்ந்த குழந்தைங்க,அதாவது 11 வயசுக்கு மேல school assignments,project க்கு computer use பண்ணனும்னா,அவங்களுக்கு desktop வாங்கி குடுங்க..அதுவும் அத எல்லாரும் பார்க்கிற மாதிரி ஹால்ல வைங்க..தனியா  அவங்க ரூம்ல வைக்காதீங்க..

5..உங்க குழந்தைங்க ஆணோ,பெண்ணோ அவங்களுக்கு எதிர் பாலினத்தை மதிக்கவும்,சம்மாக பாவிக்கவும் சிறு வயதிலிருந்தே பழக்குங்கள்..முக்கியமா ஆண் குழந்தைங்களுக்கு..


ஏன் நம்ம இவ்ளோ மெனக்கடனும்னா,இப்போ நம்ம இருக்கற சூழல் அப்படி..நிறைய information நம்ம பிள்ளைங்கள தேடி வந்து அவங்க பிஞ்சு மனச நிறைக்குது..அதுல அதிகமானது அவங்களுக்கு தேவையில்லாதது,வயதுக்கு மீறீயது....நம்மளால முடிஞ்ச வரைக்கும்,அவங்க கொஞ்சம் வளர்ற வரைக்குமாவது இந்த information overload லேர்ந்து அவங்கள பாதுகாக்கனும்..அவங்க கொஞ்சம் வளர்ந்துட்டாங்கன்னா அவங்களுக்கு கொஞ்சம் மனமுதிர்ச்சி வந்துருக்கும்.எது தப்பு எது சரின்னு அவங்களுக்கே புரிய ஆரம்பிக்கும்..அதுவும் சின்ன வயசுலேர்ந்தே நல்ல அன்பான சூழல்ல வளர்ற குழந்தை கெட்டவற்றை விட்டு ஒதுங்கியே தான் இருக்கும்...அந்த சூழல அவர்களுக்குத் தர வேண்டியது நம்ம பொறுப்பு....

1 comment: